பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

கடிதம் : 5
கூடுமானவரை குறைத்துச் செலவழி:
நிக்கோலோ மாக்கியவெல்லியின் மகன் கெய்டோவுக்கு,
இமோலா, ஏப்ரல் 2,1527.

கெய்டோ, என் அன்புள்ள மகனே,

உன் கடிதம் கிடைத்தது. எனக்கு அது பெருங்களிப்பை உண்டாக்கியது. ஏனெனில் நீ மீண்டும் உடல் நலம் பெற்று விட்டாய் என்ற விசேஷச் செய்தியை அது எனக்குத் தெரிவித்தது. வேறு எந்தச் செய்தியும் மேலும் என்னை மகிழ்ச்சியடையச் செய்தது. ஆண்டவன் உயிர் கொடுத்து . அருள் புரிந்தால், எனக்குக்கூட அருள் புரிந்தால், தான் உன்னைக் கொண்டு, சிறப்பாக, உன்னால் முடிந்ததையெல்லாம் நீ செய்து முடித்தால், ஏதாவது பயனடையலாம் என்று நம்புகிறேன். நீண்ட நாட்களாக என்னோடு நண்பர்களாக இருந்த முக்கியமான மனிதர்களோடு இப்போது நான் கார்டினல் சையோ அவர்களுடன் மிக உயர்ந்த நட்புக்கொண்டிருக்கிறேன். உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது. இந்தத் தொடர்பு உன்னை நன்னிலைக்குக் கொண்டு வரும். ஆனால், தானாகவே படித்துக்கொள்ள வேண்டியதுதான். நீ தவறு செய்து விட்டுச் சாக்குப் போக்குக் கூற இனி முடியாதாகையால், கடினமாக உழைத்து, இலக்கியத்தையும் சங்கீதத்தையும் நன்றாகப் படித்துக்கொள். எனக்குக் கிடைக்கும் மதிப்பு முழுவதும் என்னிடமுள்ள சிறு திறமையின் காரணமாகவே வருகிறதென்பதையறிந்து கொள். ஆகவே, என் அன்பு மகனே, நீ என்னை இன்பமடையச் செய்யவேண்டுமானால், எதிலும், வெற்றிகரமாக முன்னேறு. உன்னை நீயே நம்பு. கடுமையாகப் படி. யோக்கியமாக நட. கல்வியில் கவனம் செலுத்து. உனக்கு நீயே உதவி செய்து கொண்டால் ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள். சின்னக் கோவேறு கழுதைக்குப் பைத்தியம் என்று எழுதியிருந்தாய். நல்லது. சாதாரணப் பைத்தியங்களை நடத்துகிறதற்கு மாறாக இதை நடத்தவேண்டும். பைத்தியம் பிடித்தவர்களை நீ கட்டித்தானே வைப்பாய். இந்தச் சின்ன கோவேறு கழுதையை அவிழ்த்து விட்டு விடவேண்டும். ஆகவே, வெஞ்சிவோவிடம் அதைக்கொடுத்து, மோண்டிப் மாக் - 10