பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

தன் பலத்தை நம்பி வாழாத ஆட்சியாளன் என்றும் பாதுகாப்புடன் இருக்க முடியாது!

ஆட்சியாளன் எப்போதும் திறமையை மதிப்பவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

ஆட்சி நடத்தும் அரசனிடம் பொதுமக்கள் அன்பு கொண்டிருப்பது நல்லதா அச்சம் கொண்டு அடங்கியிருப்பது நல்லதா என்று கேட்டால், அஞ்சுவதே நல்லது என்றுதான் வேண்டும்.

ஆளுபவனிடம் மக்கள் கொள்ளும் அன்பு மாறும் இயல்புடையது; அச்சமோ என்றும் மாறாது.

அரசாளும் தலைவன் அவனுடைய குடிமக்களால் பழிக்கப்படலாம். ஆனால் வெறுக்கப்படக் கூடாது.

மக்கள் மன்னனுக்கு அஞ்சி நடக்கலாம். ஆனால் தன்னை வெறுக்கும்படியாக மன்னன் நடந்துகொள்ளக் கூடாது.

அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்.


மக்களின் வெறுப்புக்காளான மன்னரெல்லாம் சதிகளுக்கு ஆளாகி கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

எந்த அரசாங்கமாய் இருந்தாலும், அதன் தலையாய விஷயம், தன்னை வெறுப்பிற்கும் நிந்தனைக்கும் ஆளாகாமல் காப்பாற்றிக் கொள்வதேயாகும். இது அதன் பிரஜைகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும். அண்டை அயல் நாடுகளிடையே அது கொள்ளும் தொடர்பிற்கும் பொருந்தும்.

பொது மக்கள் ஓர் ஆட்சியாளனை அலட்சியப் படுத்தத்தொடங்கிவிட்டால், அவன் விரோதியைப் போல் ஆபத்தானவன் அல்ல என்றோ, நண்பன் என்றோ கருதப்பட்டாலொழிய, அவன் மீது பலவிதமான ஏளனங்கள் வீசப்படும் எனவும் அவனைக் கவிழ்ப்பதற்கு ஒவ்வொரு விதமான சதித்திட்டமும் உருவாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஒரு நாட்டு மக்கள் தங்களை ஆளும் ஒர் அரசனைப் படையெடுத்து வரும்படி வரவேற்பார்களானால், அப்படி வரவேற்கப்பட்ட வெளி நாட்டான் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஏனெனில் அவனாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாது.