பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கொண்டேயிருக்கும். ஆனால், ஒருவருடம் வரை எந்தப் படையெடுப்பும் நடந்து கொண்டேயிருப்பதென்பது நடக்கக்கூடிய காரியமல்ல.

கோட்டைக்கு வெளியே மக்களின் சொத்துக்கள் இருக்குமானால், தங்கள் பொருள்கள் சொத்துக்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மாயிருக்க முடியாது. அவர்கள் பொறுமை எல்லை மீறி விடும். அவர்களுடைய சுயநலம் அரசனைப் பற்றிய எண்ணத்தையே அடியோடு மறக்கடித்து விடும்.

ஆற்றலும் தைரியமும் உள்ள அரசன், பகைவர் செய்யும் தீமைகள், அழிவுகள் நெடுநாளைக்கு நிலைக்காது என்று குடிமக்களுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். உண்மையில் எதிரி எல்லாவற்றையும் எரித்து அழித்துக் கொண்டு வருவானானாலும், மக்கள் தங்களையாவது காப்பாற்றிக் கொள்ள எண்ணியிருப்பார்கள். சிறிது காலத்திற்குப்பிறகு, இந்த விஷயம் ஆறிப்போனபிறகு அவற்றைத் தவிர்க்க எவ்வித வழியும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மக்கள் தங்கள் சொத்துச் சுதந்திரங்கள் எல்லாம் அழிந்துபோய் விட்டபடியால் மீண்டும் தங்களைக் காப்பாற்ற வேண்டியவன் அவனே என்று அவனிடம் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.

புத்திசாலியான ஓரரசன் தன் நாடு படையெடுப்புக்கு ஆளாகும் ஆரம்பக்கட்டத்திலும், படையெடுப்பு நடக்கும் சமயத்திலும் தன் குடிமக்களின் தைரியத்தை ஒன்று சேர்க்க முனையும் விஷயத்தில் கஷ்டப்படவேண்டியதேயில்லை. அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழியும் உணவுப் பொருள்களும் உடையவனாக இருந்தால் போதுமானது.

மதச் சார்பான அரசுரிமை :

ஒரு மதத்தைக் காரணமாகக் கொண்டு அரசுரிமை அடைவதில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன. இவ்வாறு அரசுரிமை அடைவதற்குத் திறமையோ அல்லது அதிர்ஷ்டமோ வேண்டும். ஆனால், அதை நடத்துவதற்கு இவற்றில் எதுவும் தேவையில்லை. ஏனெனில் அவை பழைய மத ஆசாரங்களினாலேயே நிலைநிறுத்தப்பட்டு விடுகின்றன. அந்த மத ஆசாரங்கள் மிகுந்த ஆற்றலும், தன்மையும் உடையனவாக இருப்பதால், இப்படிப்பட்ட மத அரசுகளின்