பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மனிதர்களுடையது. இரண்டாவது வழி மிருகங்களுடையது) முதல் வழி போதுமானதாக இல்லாததால் இரண்டாவது வழியிலும் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆகவே ஓர் அரசன் இரண்டு முறைகளையும் கையாளத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

(மிருகங்களைப் போல் நடந்துகொள்ள விரும்புகிற அரசன் குள்ள நரியையும் சிங்கத்தையும் பின்பற்ற வேண்டும். சிங்கத்திற்கு வலைகளிலிருந்து தப்பிக்கத் தெரியாது. குள்ள நரிக்கு ஓநாய்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. ஆகவே ஓர் அரசன் சதி, சூழ்ச்சி ஆகிய வலைகளை அறிந்து கொள்ளும் குள்ள நரியாகவும், ஓநாய்களை அச்சுறுத்தும் சிங்கமாகவும் இருக்க வேண்டும்).

உண்மையாக அல்லது நேர்மையாக நடந்துகொள்ளக் கூடிய அரசன் தன் நன்மைக்கே கேடு விளைவித்துக் கொள்பவனாகிறான். மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாய் இருந்துவிட்டால், இந்த வார்த்தை தவறானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தீயவர்களாக இருப்பதனாலும், தாங்கள் பிறரிடம் நேர்மையைக் கடைப்பிடிக்காதவர்களாக இருப்பதனாலும், அவர்களிடத்தில் உண்மையாயிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இதற்குச் சான்றாக, குள்ளநரிச் செயல் புரிந்தவர்களின் கூட்டமே மிகச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வரலாற்றிலிருந்து எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.

புதிதாக அரசனான ஒருவன் தன் ராஜ்யத்தைக் காப்பாற்ற உண்மைக்கு மாறாகவும், தயாள குணமில்லாமலும், மனிதத் தன்மைக்கு விரோதமாகவும், மதத் துரோகமாகவும் கூட நடந்துகொள்ள வேண்டி நேரிடும். அவன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட முடியாது (காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்)

எந்த அரசனும் தான் எவ்வளவு நியாய விரோதமாக நடந்துகொண்டாலும், அருளும், உண்மையும், நேர்மையும், மனிதத் தன்மையும் மனிதாபிமானமும் உடையவன் போலக் காட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் கண்களால் ஒன்றை மதிப்பிடுவார்களே