பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

தவிரக் கையினால் மதிப்பிடுபவர்களாக இல்லை. எல்லோராலும் ஒன்றைக் காண முடியும். ஒரு சிலரால் தான் உணர முடியும்! ஒருவன் தோற்றத்தைக் கொண்டே ஒவ்வொருவரும் அவனை மதிப்பிடுகிறார்கள். மிகச் சிறுபான்மையினர்தாம் அவன் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

தற்காலத்தில் ஓர் அரசர், (அவர் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை) நேர்மையையும், சமாதானத்தையும் பற்றிப் பஜனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஆனால் உண்மையில் இவை இரண்டுக்கும் நேர் எதிரி-பெரும்பகைவர் அவர். அவர் மட்டும் இந்த இரண்டில் ஒன்றைக் கையாளுபவராக இருந்தாலும் எந்தெந்தச் சந்தர்ப்பத்திலோ தன் ராஜ்யத்தையோ அல்லது தன் கீர்த்தியையோ இழக்க வேண்டி நேர்ந்திருக்கும்!

(பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

-திருக்குறள்)

வெறுக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் விலக்கிக்கொள்ள வேண்டும்:

ஓர் அரசன் தன்னை வெறுக்கும்படியும் பழிக்கும்படியுமான காரியங்களை விலக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டால், வேறு எவ்விதமான தீமையும் அவனுக்குக் கேடு செய்ய முடியாது. கொள்ளைக்காரனாகவும் தன் குடி மக்களுடைய சொத்துக்களையும் பெண்களையும் சூரையாடுபவனாகவும் இருக்கக் கூடிய அரசன்தான் வெறுக்கப்படுவான். அவன் அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் மனத் திருப்தியோடிருப்பார்கள். அவன் ஒரு சிலருடைய பேராசையை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அவர்களை எத்தனையோ வகைகளில் தீர்த்துக் கொள்ளலாம்.

ஓர் அரசன் தீர்மானமில்லாதவனாகவும், அடிக்கடி மாறக் கூடியவனாகவும், அற்ப குணமுடையவனாகவும், கோழைத்தனமும் அச்சமும் உடையவனாகவும் இருந்தால் அவன் நிச்சயம் நிந்தனைக்காளாவான். அவனுடைய செயல்களில் பெருந்தன்மையும், ஊக்கமும், கவர்ச்சியும், ஆண்மையும் இருக்கவேண்டும். அவனுடைய குடிமக்களின்