பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மாக்கியவெல்லியையே பிசாசு என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு நிக் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கோலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு நிக் என்ற பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவனைப் பற்றிப் பேசிக் கொள்வதுமுண்டு. மாக்கியவெல்லிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் அல்லது அரசியல் கொடுமை என்று பொருள் கூறுவோரும் உண்டு.

ஆனால், மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கும் ஆளாகும்படி என்ன செய்தான் என்றால், தன் மனத்தில் ஏற்பட்ட கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னான். அவ்வளவுதான்.

மாக்கியவெல்லி, அரசர்கள் கொடுங்கோலர்களாக இருக்க வேண்டுமென்று கூறினான் என்று அவன் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் இருக்கிறார்கள். அரசர்கள் கொலை கொள்ளைகளை அஞ்சாமல் செய்யவேண்டுமென்று கூறினான் என்று பழிசுமத்துபவர்கள் இருக்கிறார்கள். மாக்கியவெல்லி எந்தச் சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிச் சொன்னான் என்பதை ஆராயாமலோ, அல்லாது தெரிந்திருந்தும், அவன்மீது குறை சொல்வதே குறிக்கோளாக அதை மறைத்தோ கூறியவர்களின் வாய்மொழியாகத்தான் இந்த நிந்தனைகள் இருக்க வேண்டும். அவர்கள் கூறுகிறபடி பார்த்தால்,

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனொடு நேர்.

என்று கூறிய திருவள்ளுவரும் கூடக் கொடுங்கோன்மையை ஆதரித்ததாகவே எடுத்துக் கொள்ள வேண்டி நேரிடும்.

மாக்கியவெல்லி பல இடங்களில் திருவள்ளுவரின் கருத்துக்கு மாறுபடுகிறான் என்றாலும் அவன் கூறுகின்ற கருத்துக்கள் ராஜதந்திரம் என்ற முறையிலே காலத்தையும் இடத்தையும் நோக்கி வரவேற்க வேண்டியவையாக இருக்கின்றன.

மாக்கியவெல்லியின் நோக்கம் ஒன்றே ஒன்று. அது பயன் நன்மையாக இருக்க வேண்டும். மக்கட்கு நன்மை