பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

பொதுக் காரியம் எதுவென்றோ, பகைமை எது அல்லது பாதுகாப்பு எதுவென்றோ அறியாதவர்களாகவும் மன்னர்களைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமலும் அவர்களால் தாங்கள் தெரிந்து கொள்ளப் படாமலும் இருந்து. இந்த நிலையில், முன்னைய ஆட்சியைக் காட்டிலும் மோசமான ஆட்சிக்கு வெகு எளிதில் உட்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இத்துடன் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. விடுதலையடைகிற ராஜ்யம் நண்பர்களைப் பெறுவதில்லை; பகைவர்களையே பெறுகிறது. கொடுங் கோலாட்சியில் நன்மையடைந்தவர்களும், மன்னனின் நிதிப் பணத்தில் உண்டு கொழுத்தவர்களும், ஆட்சி மாறியவுடன் அப்படிப் பட்ட வசதிகளையெல்லாம் இழந்து விடுகின்றபடியால், அதன் பகைவராக மாறுகிறார்கள். முந்திய அதிகாரங்களையும் நன்மைகளையும் திரும்பப் பெறுவதற்காக அந்த மனிதர்கள் மீண்டும் கொடுங்கோலாட்சியைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இதனால்தான் விடுதலையடைகிற ஓர் அரசு நண்பர்களைப் பெறுவதில்லை; பெரும் பகைவர்களையே பெறுகிறது என்று கொள்கிறோம். இந்தப் பகைவர்களைக் கொன்றொழிப்பதைத் தவிர, அந்த நாடு தன் விடுதலையைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி எதுவும் இல்லை.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

- திருக்குறள்

பழமைப் போர்வையில் புதுமையைப் புகுத்த வேண்டும் :

ஒரு ராஜ்யத்தின் அரசாங்கத்தைச் சீர்திருத்த முயல்கிறவன் அதன் பழைய நடவடிக்கைகளின் வெளித் தோற்றம் மாறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும். உண்மையில் மகத்தான மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் வெளிக்கு மாறாததுபோல் தோன்றச் செய்ய வேண்டும். இந்த இரகசியத்தை ரோமானியர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு தலைமையதிகாரிகளை அரசனுக்குப் பதிலாக நியமித்த அவர்கள், அவர்களுடைய