பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

துணைப்படைத் தலைவர்களின் உழைப்பாக இருக்கும் என்று கூறி அவனைச் செல்வாக்கிழக்கச் செய்துவிடுவார்கள்! சில சமயம் கொன்றுவிடவும் செய்வார்கள்.

அச்சமும் ஐயப்பாடும் அரசர்களுக்கு ஏற்படுவது இயல்பு. அவற்றை எதிர்த்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது. ஓர் அரசன் எப்படித் தவறு செய்யாமல் இருக்க முடியாதோ அப்படியே ஒரு தேசத்து மக்களும் இருக்க முடியாது என்று கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முடிவாக, இந்தத் தவற்றுக்கு லோபித்தனம் காரணமாக மக்கள் ஆளாவதே கிடையாது. அச்சத்தின் காரணமாக அரசர்களைப் போல அவர்கள் இதற்கு ஆளாவதும் அதிகமில்லை. ஏனெனில் அவர்கள் அச்சமடையக் காரணமும் அதிகமில்லை.

ஆபத்துக் காலத்துச் சலுகை :

ரோமாபுரியின் ஆட்சிப் பீடத்தில் மீண்டும் பழைய மன்னர்களான டார்க்குவின்களை அமர்த்துவதற்காகப் போர் சென்னாதாக்கிய போது, ரோமானியக் குடியரசுக்கு ஆபத்து வந்துவிட்டது. யுத்தத்தில் இறங்குவதைக் காட்டிலும், பழைய அரசர்களையே திரும்பவும் குடிமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற சந்தேகம் ஆட்சிக் குழுவினருக்கு ஏற்பட்டது. இந்தச் சந்தேக நிலையை நீக்கித் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உப்பு வரி போன்ற சில வரிகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். பஞ்சம், போர் முதலிய கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு மக்களும் எதிரிகளை எதிர்த்துப் போராட உதவியாயிருந்தார்கள். ஆனால், இதே உதாரணத்தை எல்லா அரசுகளும் பின்பற்றி விடக் கூடாது. ஏனெனில் இப்படிப்பட்ட சலுகைகளுக்கு ஆட்சியாளர்கள் தாம் காரணம் என்று மக்கள் நினைக்கமாட்டார்கள். தங்கள் பகைவர்கள் தாம் காரணம் என்றுதான் எண்ணுவார்கள். போர் முடிந்ததும் மீண்டும் அந்த வரிகள் குட்டி போட்டுக் கொண்டு வந்துவிடும் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால், ரோமாபுரியில் மட்டும் இந்தக் கொள்கை வெற்றி பெற்றதே என்றால் அங்கு அந்தச் சமயத்தில் ஆட்சி புதிது. வேறு பல சட்டங்கள் தங்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்டதை மக்கள் அறிந்திருந்தார்கள். பகைவர்கள் வந்து விட்டதால்