பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தவத்திரு அடிகளார்



5. “தாவர இனங்கள் மனிதனை விடச் சிறந்தவை என்று கூறுவது ஏன்? இன்றைய மானுடப் பிறவிக்கு இது பொருந்துமா?”

பொருந்தாச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடித் தமது வளர்ச்சிக்குரிய சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள தாவரங்களால் இயலாது.

மானிடர் தாம் பெற்ற பகுத்தறிவால் பொருந்தாச் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடித் தம்முடைய சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளும் திறனுடையவர்கள்.

ஆனால், இன்றைய நம்முடைய தமிழ்ச்சாதி சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றலுற்றிருக்கிறதா? இல்லை. இன்றைய தமிழ்ச்சாதி, சூழ்நிலைகளின் கைதிகளாக வாழ்கின்றது”.

6. “ஒருவன் மரம் வைத்து வளர்த்தால் அது அவனுக்குப் பயன்படாது. அடுத்த தலைமுறைக்குப் பயன்படும் என்று சொல்லுவார்கள். இது தவறு.

ஒருவன் ஒருமரம் வைத்தால் அவன் சில நாள்களி லேயே அந்த மரத்தின் பயனை அனுபவிக்கிறான். மரம், செடியாக இருக்கும்போதே சுவாசத்துக்கு அவனுக்குத் தேவையான உயிர்ப்புக் காற்றைத் தருகிறது.

இன்றைய வேளாண்மை வளர்ச்சியின் போக்கில் கனிகளைக் கூடச் சில ஆண்டுகளில் பெற முடிகிறது”.

7. “சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு என்பது பூத பெளதிகத் தூய்மை மட்டுமல்ல. சுற்றுப்புறத்தில் வாழும் சமுதாய மேம்பாடும் சேர்ந்ததேயாம்”.