பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

3


“கவனித்துப் பேணி வளர்க்காத மனித சமுதாயம் கொடுரமானதாக உருக்கொள்ளும் என்பதற்குப் பூலான்தேவி சான்று”.

8. “மனித குலத்திற்கு உழைத்தல் என்பது இயல்பான குணமானால்தான் மண்ணை விண்ணகம் ஆக்கலாம்”.

9. “பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்வு காணப் பெறாவிடில் அவை தம்போக்கில் தீர்வு காண முயன்று சமூகத் தீமைகளை வளர்க்கும்”.

10. “மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர். அவர் வரலாற்றை-மனித வாழ்வியலை அணுகிய முறையை சமய நெறியினர் கற்று, அம்முறையில் அணுகினால் மண்ணுலகு விண்ணுலகமாகும்”.

11. “பயந்தாங்கொள்ளிகள் எதையும் குழப்புவார்கள்”.

12. “புகழ் என்றால் மகிழ்வதும், இகழ் என்றால் வருத்தப்படுவதும் வாழ்க்கைக்குத் துணை செய்யாது. அதுவும் தொண்டு வாழ்க்கைக்கு முற்றாகக் கூடாது”.

13. “கூட்டுறவு சங்கம் கடன் வாங்குவதற்காக மட்டும் அல்ல. கூட்டுறவு இயக்கம் ஒரு பன்முனை வளர்ச்சி இயக்கம். அதாவது மனித இயல் பண்புகளையும் ஆட்சித் திறனையும் வளர்த்துச் செழுமைப்படுத்தும் இயக்கம”.

14. “கூடித் தொழில் செய்வதன் மூலம் குற்றம் குறையிலாத வகையில் தொழில் நடைபெறும் என்பது கருத்து. ஆனால் இன்றைய நடைமுறையில் பெறப்பட்டுள்ள உண்மை இதுவல்ல”.