பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு அடிகளார்


வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார். அதனால் ஒரளவு வெற்றி பெற்றார். ஆனால், பெரியார் எதிர்ப்பை மட்டுமே செய்தார். அதனால் நிலைத்து நிற்கவில்லை. அவர் பாசறையில் வளர்ந்தவர்களேகூட கடவுள் வழிபாட்டுக்கு வந்துவிட்டனர். அது மட்டுமல்ல. மதத்தை எதிர்த்துப் பேசுதல் அறியாமையின் செயல் என்று எண்ணுகின்றனர்.

1154. “சமயம், சமூகம், இரண்டும் இணைந்த நோக்கங்களே! இந்த இணைப்பு பராமரிக்கப் பெற்றாலே சமுதாயம் வளரும்”

1155. “இந்திய அரசியல் படுமோசமான நிலைக்குப்போய்க் கொண்டிருக்கிறது. வெறி நாய் நிலைக்கு வந்துவிட்டது.

1156. “எந்த ஒன்றிலும் இறுகப் பற்றிய சார்பு வந்துவிட்டால் நீதி புலப்படாது.”

1157. “உலக மானிட சாதி ‘சுதந்திர’ வரலாற்றை உணர்ந்தாலே சுதந்தரத்தை இழக்கத் துணியமாட்டார்கள்.”

1158. “செயலற்றவர்கள், செயலுள்ளவர்கள் மீது அழுக்காறு கொள்ளுதல் தவிர்க்க இயலாதது, கவலற்க.”

1159. “ஆளுமை என்பது ஒரு கலை. அதை நாள்தோறும் பயிலுதல் வேண்டும்.”

1160. “செயற்பாட்டுக்குரிய ஆயத்த நிலையில் இருக்கப் பழகியவர்கள் சிறந்த ஆளுமையைப் பெறுவார்கள்.”

1161. “அறிவியல், பொருளியல், ஆட்சியியல், அருளியல் அனைத்தும் வீட்டு வாசற்படிக்கு வந்தாலும் ஏற்க முன்வரா சில அபூர்வப் பிறவிகள் உண்டு.”