பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு அடிகளார்


பயனற்றதாகிவிடுகிறது. ஒரு நிர்வாகத்தில் ஒருவர் பலவீனராக இருந்தாலும் பாதிக்கும்.”

1771. “தேர் இழுவையின் பொழுது-தேர்வடத்தில் ஒரு பகுதி அறுந்துபோனாலும் ஆயிரக் கணக்கானவர்கள் கீழே வீழ்ந்துவிடுவர். அதுபோல விரைந்து வளரும் நிர்வாகத்தில் ஒருவர் பொறுப் பில்லாது நடந்து கொண்டாலும் ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கையைப் பாதிக்கும்.”

1772. “கணக்குப் பார்க்கும்பொழுது வேலையின் அளவும், பயனும் சரியாக இல்லாது போனால் வேலை செய்ததாகக் கூற இயல்ாது.”

1773. “வேலையின் பயனை அனுபவிக்க இயலாத நிலையில் வாயினால் வேலை பார்த்ததாகக் கூறுவது ஏற்புடையதன்று.”

1774. “தொடுதல், தொடர்தல், முடித்தல் இடையீடு இல்லாத பணிநிலை உடையன.”

1775. “நாள்தோறும், செல்வ வரவும், செல்வ வளர்ச்சிக்குரிய வாயில்களும் கண்காணிக்கப் பெறுதல் வேண்டும்.”

1776. “வரவுகள் கண்காணிக்கப் பெறுதலே செல்வப் பாதுகாப்புக்கு உரிய வழி.”

1777. “மாதவி, மணிமேகலையை, துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியது, கோவலனின் புகழைப் பாதுகாப்பதற்காகவே!”

1778. “மாதவி, மணிமேகலையைத் துறவு நெறியில் ஆற்றுப்படுத்தியது. கோவலனிடம் அடைந்த ஏமாற்றத்தின் விளைவே!"