பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தவத்திரு அடிகளார்



115. “காஞ்சிபுரம் புதுப் பெரியவாள் தொடங்கியுள்ள இந்திய சமய இயக்கத்தில் பெளத்தம் ஜெனம் சேர்கிறதா? இல்லையா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்”.

116. “வலிமையற்ற மனம் எப்போது கெடும் என்று கூற முடியாது. எப்போதும் கெடலாம்”.

117. “பெண், தற்கொண்டானைப் பேணுதலே கணவனின் கற்புக்கு அரண்” என்னும் திருவள்ளுவம் வாழ்க்கையின் உண்மை”.

118. “எந்த ஒரு கடமையையும் முறையாகக் காலத்தில் செய்யாதவர்கள் பலருக்குத் தொல்லைகளைத் தருவர்”.

119. “காலம்” என்ற உணர்வே இல்லாதவர்களின் உறவு, பல இழப்புக்களைத் தரும்”.

120. “மனித குலத்தில் முதலில் தோன்றியது கடவுள் நம்பிக்கையே. கடவுள் நம்பிக்கையின் வழியாக மதங்கள்-மதத் தலைவர்கள், புரோகிதர்கள் தோன்றிய பிறகு கடவுள் சுரண்டும் சாதனமாக மாறியது. அதற்குப் பின்தான் நாத்திக நெறிகள் தோன்றுகின்றன. இது உலகாய மதத்திற்கு உரிய தன்று”.

121. “சாதாரண மக்களிடத்தில் இடம் பெற முடியாத சமய நெறி வரலாற்றில் நிற்காது. கடவுளை நினைந்து வழிபடக்கூடப் புறத்தே ஒரு வடிவம் சின்னம்-பெயர் தேவைப்படுவதால் பொருளை முதலாகக் கொண்டதுதான் வாழ்வியல் என்பது உண்மையாகிறது”.

122. “கொள்கை வழிப்பட்ட இயக்கங்கள், பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை”.