சிந்தனைத் துளிகள்
17
“அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொள்கையில் தெளிவுள்ளவர்களாக விளங்குவதும் அக்கொள்கையைத் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவதுமே போதும்”.
123. “நமது சமயம் ஒரு காலத்தில் ஆற்றல் மிக்குடைய இயக்கமாக இருந்தது. காலப்போக்கில் அது அப்பட்டமான நிறுவனங்களாகி வலுவிழந்து போயின”.
124. “உலகின் பிற சமயங்கள் ஆசிரியர்மாரைப் பாராட்டுகின்றன. நாம் அதைச் செய்யாதது ஒரு பெரிய குறை”.
125. “வைணவ பட்டாசாரியர்கள், மதத் தலைவர்கள் ஸ்மார்த்தமாகிய புல்லுருவியைத் தம்முடைய சமயத்தில் அனுமதிக்கவில்லை. சைவத்தில் புல்லுருவிதான் மிச்சம்”.
126. “ஊருக்கு உதவி செய்ய முயன்று முறை மன்றத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று”.
127. “தமிழினம், நடுவணரசின் பொறுப்புகளுக்குப் போகாது போனால் வளம் சுருங்கி வாழ்விழக்கும்”.
128. “ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால் அந்தச் சமூகத்திற்கு முன்னேற வேண்டும் என்ற ஆசை வேண்டும்”.
129. “சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது”.
130. “பொது நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு ஊறு விளைவித்தவர்களை திருடர்களை-நடுத் தெருவில் கல்லால் அடித்துச் சாகடிக்கும் தைரியம் தேவை.” த-2