பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு அடிகளார்



184. “ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும்பொழுது பிறிதொரு சிக்கல் தோன்றும் வகையில் தீர்வு காணுதல் கூடாது”.

185. “அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்ட சமூகம் தோன்றினால்தான் நாடு வளரும்”.

186. “மோசமான மனிதர்கள் எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள்”.

187. “மதங்கள் தோன்றிய பிறகுதான் சமூகம் சீரழிந்தது”.

188. “சாதி வேற்றுமைகள் நீங்கினாலே தீண்டாமை நீங்கும்”.

189. “இந்த உலகில் மக்களாகப் பிறந்தோர் பேசும் மொழிகளில் கடவுளைச் சுட்டிக்காட்டிய மொழி தமிழே!”

190. “ஒன்றை இழந்து விடுவோம் என்ற அச்சம் ஆர்வத்தைத்தூண்டி முயற்சியில் இறக்கி விடும்”.

191. “அக்கறையுடைய வாழ்க்கையே ஆளுமையைத் தரும்”.

192. “நன்றாற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை” என்ற திருக்குறள் அனுபவ வாக்கு! காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. யாரை நோக்கிச் செய்யப்படுகிறதோ அந்த மக்களையும் வளர்த்துக் கொண்டால்தான் காரியங்கள் பயன்படும்”.

193. “இறைவா! ஏன் இந்த நிலை? என்னை, இப்படி எல்லோரையும் கொண்டு ஏசவைக்கிறாய்? இறைவா! புரிகிறது உன் தந்திரம் ஏச்சுக்கள் மூலம்”.