பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு அடிகளார்



443. தாயன்பு பெரிதே! அந்த அன்புக்கு எதுவும் இணையல்ல.”

444. “இழிவு மனப்பான்மையுடையோர், வீண் பெருமைக்கு ஆசைப்படுவர்.”

445. “பரம்பரைக்குணம் எளிதில் மாறாது. ஆனாலும் தொடர்ச்சியான முயற்சி மேற்கொண்டால் மாற்றமுடியும்.”

446. “கடமைகளைச் சரியாகச் செய்யாமல் ஏற்பட்ட இழப்புகளுக்கு அழத்தெரியாதவர்கள்-கடமைகளைச் சரியாகச் செய்யாமைக்குக் காரணம்-தெரியாமை, இயலாமை அல்ல. பொறுப்புணர்ச்சி யின்மை.”

447. “அறிவின் ஆக்கமும் பண்பட்ட உள்ளமும் சமூக மனப்பான்மையும் இல்லாத தலைமை மோசமானது.“

448. “எத்தகைய மனிதரையும் தலைமையின் வழி வந்து சாரும் உறிஞ்சிகள் கெடுத்துவிடுகின்றனர்.”

449. “செய்யச் சொல்வதைவிட செய்வது எளிது.”

450. “குடும்பம், சமூகம், ஊர், அரசு-இவை ஒத்திசைந்தால்தான் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும்.”

451. “அப்பாவிகளாக இருப்பதும் ஆபத்தே.”

452. “தண்ணிரில் சுண்ணாம்பு கரைவதைப்போல பரசிவ வெள்ளத்தில் நனைந்து கரைவதே ஆன்மீக வாழ்க்கை.”

453. “ஆற்று வெள்ளம் மணலை தள்ளிச் செல்லும், ஆனால், மலைகளை எடுத்துச் செல்லாது.