சிந்தனைத் துளிகள்
61
கொள்ளப்படும் உயிர்கள் வேண்டுவதை வேண்டிய வாறு வழங்கி ஆட்கொள்ளும் இயல்பினன். ஆதலால், இறைவனுக்குப் பல வடிவங்கள் வந்தன.”
501. “பரிசுகளுக்காகக் காரியங்கள் செய்வது என்பது இரண்டாம் தரமே!”
502. “திறமைக்கு மாற்றாக நன்மை என்ற ஒன்றைக் காட்டாமல், தீமையை மட்டுமே கூறுவது, பழி துாற்றலாகும்.”
503. “உடைமைகள் பயனுடையனவாதல், உடைமை பெற்றோரின் செயல்திறத்தைப் பொறுத்தேயாம்.”
504. “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, காங்கிரஸ் எதிர்ப்பைத் தவிர, வேறு கொள்கையில்லை என்றாகி விட்டது.”
505. “கல்வியறிவில் கேள்வியறிவு உயர்ந்தது; கேள்வியறிவிலும் பட்டறிவு உயர்ந்தது.”
506. “ஒருவன் வீட்டுக்குக் கொள்ளி வைக்கிறான் இன்னொருவன் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏன்? கொள்ளி வைக்கப் பெறும் வீடு தனக்குப் பிடிக்காத கட்சிக்காரன் வீடு. இந்த அளவுக்குக் கட்சிப் பகை வளர்ந்துவிட்டது.”
507. “பரபரப்பு நிறைந்த வாழ்க்கை, காரிய சித்தியைக் கெடுக்கும்.”
508. “முகத்தில் மண்டியுள்ள வேண்டாத ரோமங்களைக் கூட, தண்ணீர் தடவி மெள்ள மழித்துத்தான் ஆகவேண்டும். அதுபோலத்தான் தீமையை மெள்ள மெள்ளப் பக்குவப்படுத்தித்தான் நீக்க வேண்டும்.”