பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு அடிகளார்


அறிவும்; வீரமும் ஏற்புடையதல்ல. நீதியும் அருளும் சார்ந்த வீரமே வீரம் இதுவே ஏற்புடையது.”

544. “இறைவனுக்கும் உயிருக்குமுள்ள இடை வெளியை நீக்கி இசைவிப்பது - இசை.”

545. “தமிழர்கள் விநோதமானவர்கள். பாராட்டுவதைப் பின்பற்ற மாட்டார்கள்.”

546. “சிந்தனை, நினைப்பு, சொல், செயல் - இவை ஒத்திருப்பின் அருள் பழுத்த வாழ்வு கிட்டும்.”

547. “பாட்டையும் பாட்டுடைப் பொருளையும் அனுபவித்துப் பாடும்பொழுது மனிதனின் நிலை உயர் கிறது.”

548. “வள்ளலார் ஒரு ஆன்மா. அந்த ஆன்மாவும் படிமுறையில் வளர்ந்ததாகும். இன்றைய உலகத்திற்குத் தேவையான வள்ளலார், கடைசியாக வளர்ந்த வள்ளலாரேயாம்.”

549. “பொது நெறிக்கும், மனித நேயத்துக்கும் வள்ளலார் செய்த தொண்டு போற்றத் தக்கது.”

550. “திட்ட முதலீடு இல்லாச் செலவுகள் நெடிய நோக்கில் வறுமையையே தரும்.”

551. “சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளும்; நிலப் பிரபுக்களும் கூட வயிற்றுக்குச் சோறு போடத் தவறுவதில்லை.”

552. “அறியாமையில் உழல்பவர்களுக்கு நன்றும் தீதும் பிரித்தறியத் தெரியாது.”

553. “தமிழினம், சிந்தனையால் உயர்ந்ததுதான். ஆனால், வாழ்க்கையில் அப்படியில்லை.”