சிந்தனைத் துளிகள்
73
617. “அகந்தை அறிவை மயக்கும்; அடக்கம் அறிவை விரிவாக்கும்.”
618. “வழி, செல்லும் வழியிலேயே செல்லும், அதுபோல, வரலாறு செல்லும் வழியிலேயே செல்வது அறியாமை. வரலாற்றை நெறிப்படுத்திச் செலுத்த வேண்டியது அறிஞர்களின் கடமை.”
619. “காதல் மனமக்கள் மகப்பேற்றினை விரும்புவதுபோல, அறிஞர்கள் சமுதாய மாற்றத்தினை விரும்ப வேண்டும்.”
620. “நிலஉடைமை மீதுள்ள பற்று, உற்பத்தி ஆவேசமாக மாற வேண்டும்.”
621. “மிகச் சாதாரணமான மனிதர்களே ஆர வாரம் செய்கின்றனர். இவர்கள் கரையோரக் கடலில் மிதக்கும் நத்தைகள்; முத்துக்கள் அல்ல.”
622. “செயல்கள் செய்வதைவிட, அச்செயல்கள் வழி, பயன் காண்பதே பெருமை.”
623. “அரசியல் அதிகாரப்பசி, மனிதனை கள்ளை விட கொடுமையாகக் கெடுக்கும், இந்தப் போதைக்கு ஆளாகக்கூடாது.”
624. “எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் ஏழைகளுக்குரிய பங்கை எடுக்க விரும்புவதில் பின்தங்கியதில்லை.”
625. “பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டால் தான் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.”
626. “உடலுறுப்புக்களில் கை, வயிறு என்பன தொடர் செயற்பாட்டினதாகத் தேக்கமில்லாமல் செயற் பட்டால்தான் உடல் நலம். அதுபோல ஒரு நிர்வாகத்