பக்கம்:சிந்தனை மேடை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நீர் விதண்டாவாதம் பேசுகிறீர்.” நீங்களில் ஆரம் பித்த அப்பர் நீரில் இறங்கி விட்டார். "கொஞ்சம் இருங்கள்! நிம்மதியாக இரண்டு தரம் மூச்சு விட்டுக் கொள்கிறேன். அப்புறம் நீங்கள் என்ளுேடு எவ்வளவு வேண்டுமானலும் சண்டை பிடியுங்கள். அநியாய மாக விவரம் தெரிந்தவன் ஒருத்தனே மூச்சு நின்று போகும் படி செய்து விடாதீர்கள், சுவாமீ" என்று பெருந்தன்மை யாக அவரிடம் சொல்வி அநுமதி பெற்றபின் மூச்சு விட்டுக் கொண்டேன் நான். மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்ட பின் தைரியமாக இன்னும் சிறிது நேரம் அப்பர் சுவாமிகளோடு விவாதம் செய்தேன். இாயிலில் அவர் உட்கார்ந்திருந்த மேற்பகுதிப் பலகை யைச் கட்டிக்காட்டி, லக்கேஜ் ஒன்லி சாமான்களுக்கு மாத் திரம் என்று போட்டிருக்கிறதே என்னுடைய பெட்டி படுக் கைகளே வைப்பதற்கே இடமில்லாமல் நான் திண்டாடிக் கொண்டிருக்கும் போது நீர் இந்தப் பலகையைத் துரங்கு வதற்கு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கலாமா?’ என்று கேட்டேன். "அப்பர்’ என் கேள்வியிலிருந்த நியாயத்தைப் புரிந்து கொள்ளாமல் என் மேல் கோபப்பட்டு எரிந்து விழலானர். மிகவும் பலவீனமான வேளைகளில்தான் எதிராளிக்கு இநம் மேல் கோபம் வரும் என்ற இரகசியம் எனக்குத் தெரியுமாத லால் வகையாகச் சமாளித்தேன். நெருக்கடியில் சுகம் !. கடைசியில் இரண்டு பேருக்கும் சுமுகமான முறையில் ஒர் உடன்படிக்கை, ஏற்பட்டது. சாமான்களைப் பலகையில் ஓர் ஒரமாக வைத்துவிட்டு மீதமிருந்த இடத்தில் விழுப்புரம் வருகிற வரை அவர் துரங்க வேண்டும் என்றும் விழுப்புரத் துக்கு அப்பால் சென்னை வரை (அதற்குமேல் அந்த இரயில் போகாதாகையால் இந்த உடன்படிக்கைக்கு எழும்பூர்தான் உச்சவரம்பு) நான் துங்கிக் கொள்வதற்கு விட்டுவிட வேண் மென்று உடன்படிக்கை ஆயிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/14&oldid=825867" இலிருந்து மீள்விக்கப்பட்டது