பக்கம்:சிந்தனை மேடை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கொண்டு மெல்ல நிதானமாகத் தோன் உரித்துச் சுளையை உகித்து அநுப்வித்துச் சாப்பிட்டுக் கொண்டே தாங்கள் சாப் பிடுவதகுல்தான் இந்த இரயிலே ஒடுகிறது என்பதைப் போன்ற கர்வத்தோடு பயணம் செய்வ்ார்கள். மற்றும் சில ருக்கு இரயிலில் சீட்டு விளையாடுவது பிடிக்கும். அரசியல் பிரச்னைகளைக் காரசாரமாகப் பேசி விவாதிப்பது சிருக்குப் பிடிக்கும். - இரயிலில் பிரயாணம் செய்துகொண்டே இரயில் விபத் துக்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போவதை விரும்புவார்கள் சிலர். இரயில் ப்யணத்தின்போது மட்டும் மூக்குக்கு மேல் கோபம் வருவது சிலருடைய வழக்கமாயிருக்கும். வடக்கே சில நீண்டது.ார இரயில்களில் பயணம் செய்யும் போது நல்ல சாப்பாட்டுக்கும் நல்ல காப்பிக்கும் திண்டாட வேண்டியிருக்கும். இரயில் பயணத்தை அநுபவிக்க வேண்டு மானுல் நமக்கு வேண்டியதையே எதிர்பார்த்துத் தவிக்கா மல் போகிற வழியில் கிடைப்பதை ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்று முதலில் கூறியது இதற்காகத்தான். மற்ற வர்களுடன் எந்தக் காரணத்துக்காவது சண்டை போட வேண்டுமென்ற உத்வேகமும் இரயில் பயணத்தின்போது சிலருக்கு ஏற்படும். ஆனல் இந்த மாதிரி ஆட்கள் யாருடன் சண்டைக்குப் போகிருர்களோ அவர்களும் இதே உத்வேக முள்ளவர்களாளுல் இரயில் ப்ெட்டி இரண்டுபட்டுப் போகும். பயணம் இன்பம் இரயில் பயணம் என்பது அதை நிர்வாகம் செய்கிறவர். களுடைய நோக்கிலும், அதை அநுபவிக்கிறவர்களுட்ைய நோக்கிலும் விமர்சனத்துக்குரிய அம்சமாகி வந்தபோதிலும் இரயிலில் இன்னும் பயணம் செய்துகொண்டுதான் இருக், கிருேம். அசெளகரியங்கள் இருந்தாலும் அதனிடையே பயணம் செய்வது ஒரு செளகரியம்தான். இந்த இரயில் பயணம் இருக்கிறதே, அதைச் செளகரியம் என்பதாஅசெளகரியம் என்பதா என்று முடிந்த முடிவாகச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/18&oldid=825874" இலிருந்து மீள்விக்கப்பட்டது