பக்கம்:சிந்தனை மேடை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 விட முடியாது. இரயில் உறவு’ என்று நிலையாமையை விளக்குவதற்கு ஒரு தத்துவம் இருப்பதைப் போலவே 'இரயில் சண்டை" என்று விரைவில் மறைந்து விடுகிற பகை மையைக் குறித்தும் ஒரு தத்துவம் சொல்லலாம். இந்த நூற்ருண்டில் பிரயாணமும் அதற்கான நவீன வசதியுமே மனிதனுடைய தேவைகளில் இன்றியமையாத தாகிவிட்டன. ஜெட் விமானத்தையும், ராக்கெட்டுகளையும் விட வேகமாகச் செல்லவல்ல நவீன சாதனங்கள் உலகத் துக்குக் கிடைத்தாலும் பிரயாண அவசரம் என்பது இருந்தே தீரும். அந்தந்த நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு விதத்தில் அவசரம் இருந்தாலும், பதற்றங்கள் இருந்தாலும், பர பரப்பு இருந்தாலும் பயணம் ஒர் இன்பம். அந்த இன்பத்தை உணர்ந்து அநுபவிக்க உல்லாசமான மனம் வேண்டும். கிடைக்கிற செளகரியங்களைப் பெரிதாக மதித்து ஏற்றுக் கொள்கிற திருப்தி மிக மிக முக்கியமாக வேண்டும். .உலகத்தை அப்போதுதான் பிறந்து பார்ப்பது போன்ற புதுமைத் தாகத்தோடு பார்க்கிற ஆர்வமும் வேண்டும். நீங்கள் நிறையப் பயணம் செய்து அலுத்தவராயிருந்தால் அப்படி அந்தப் பயணங்களால் அலுத்த காரணம் என்ன என்பதைப் பற்றியாவது சற்றே சிந்தியுங்கள். நாகரிகச் சடங்குகள் சமூகமும் பழக்க வழக்கங்களும் மாறிக்கொண்டு வரு கிற வேகத்தில் சில பழைய சடங்குகள் அழிவதும் பல புதிய சடங்குகள் தோன்றுவதும் உண்டு. பழைய சடங்குகள் எப்படி நாட்பட நாட்பட நம்பிக்கை நலிந்து தேவையற்ற வைகளாகப் போகின்றனவோ, அப்படிப் புதிய சடங்கு களும் நாளைக்கு வரப்போகிற சமூகத்தில் பழையனவாகங் போய்விடலாம். மனிதர்களுடைய ஆசையில் அதைப் பற்றிச் சலிப்புத் தட்டுகிற வரையில் ஒரு பழக்கத்துக்குங் புதுமை என்ற மதிப்பு இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/19&oldid=825876" இலிருந்து மீள்விக்கப்பட்டது