பக்கம்:சிந்தனை மேடை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

있 நிலைதான் இங்கிதம். இந்தக் குணத்துக்கும், படிப்புக்கும் ஒரு விதமான தொடர்பும் இல்லை. படித்தவர்கள் பலர் சிறிதள வம் இங்கிதம் தெரியாதவர்களாக இருப்பதையும் எந்த விதத்திலும் படிப்பில்லாத பலர் நன்ருய் இங்கிதம் தெரிந்த வர்களாக இருப்பதையும் உலக வாழ்க்கையில் கண் கூடாகக் காண்கிருேம். சுற்றுப்புறத்தை உணர்ந்து வாழ்வதே ஒரு பெரிய படிப்புத்தான். நாலு பேருக்கு நடுவில் புதிய மனிதர்கள் நாலு பேருக்கு நடுவில் ஒருவன் எப் படிப் பேசிப் பழகுகிருன் என்பதை அறிந்து கொண்டும் அவனுடையஇங்கிதம் எப்படிப்பட்டதென்று கணக்கிடலாம். பத்துப் பன்னிரண்டு மனிதர்களேச் சேர்ந்தாற்போல் எதிரே சந்தித்து விட்டால் பேசிப் பழகுவதற்குக் கூசி அசடு வழிகிற நிலையை அடைவார்கள் சிலர். ஒரு மனிதனைச் சந்திக்கும் போது எவ்வளவு பக்குவமாகவும், இங்கிதமாகவும் பழக முடியுமோ, எல்வளவு பக்குவமாகவும் இங்கிதமாகவும் நூறு மனிதர்களேச் சந்திக்கிற போதும் பழக முடிந்தவன் எவனே அவன் ஏதோ ஒரு கையில் இந்தச் சமூகத்துக்குத் தலைவகைத் தேர்ந்தெடுக்கத் தகுந்தவன். அவனுடைய சுற் றுப்புற உணர்ச்சி அதிகமானது; மதிக்கத் தகுந்தது. சுற்றி இருப்பவர்களுடைய சுகதுக்கங்களையும் அந்தரங் கங்களையும் நன்ருகப் புரிந்து , கொண்டு அதற்கேற்பப் பழகு கிறவன் தான் வாழும் இடத்துக்கே ஓர் அணிகலனைப் போன் றவன். இப்படிப் பழகுகிறவர்கள் நூறு பேர்கள் இருந்தால் அவர்கள் தாங்கள் இருக்கிற ஊருக்கே பெருமையைத் தரு கிருர்கள். வறுமையும், ஏக்கமும், வாழ்க்கைத் துன்பங்களும் நிறைந்த பத்துப் பேருக்கு நடுவில் தன்னுடைய சுகபோகங் களையும், ஆடம்பரங்களையும் காண்பித்துக் கொள்ள ஆசைப் படுகிற ஒருவன் இருந்தால் அவன் சுற்றுப்புற உணர்ச்சி இல் லாதவனே. தன்னுடைய சுகம் சுற்றி வாழ்கிற பத்துப் பேரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/34&oldid=825909" இலிருந்து மீள்விக்கப்பட்டது