பக்கம்:சிந்தனை மேடை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறுக்கத்தக்க சுகம் நூறு பேரை அழச் செய்து வேதனைப் படுத்தி அதனல் பத்துப் பேர் சிரித்து வாழ்கிற வாழ்வு சமுதயத்தின் ஆரோக் கியமான சூழ்நிலை ஆகாது. பலர் வேதனைப்பட அதன் விளை வைச் சிலர் அனுபவிக்கிற நியாயமில்லாத சுகங்கள் இனி மேல் வளர்ந்து வரும் புதிய சமுதாயத்தில் பொய்யாய்ப் போய் விடும். கல்வியும், நாகரிகமும், பண்பாடும் உள்ள சமூ கத்தில் இப்படி அடைகிற சுகம் வெறுக்கத்த்க்கது. - - வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்-இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம். என்று கவி இதயம் படைத்தவன் துணிந்து சொல்லும்போது இந்தச் சொற்களில் ஆவேசமும், அழகும், நியாயமும் சேர்ந்து தெரிகின்றன. இதே வார்த்தைகளைப் பசித்துக் கிடக்கிற ஒருவன் குமுறக் குமுறச் சொல்லும்போது அந் தச் சொற்களிலே அழகும் கவிதைத் தன்மையும் இருக்காது. ஆவேசம் மட்டுமே இருக்கும். கவிகளின் சுற்றுப்புற உணர்ச்சி அழகிய பாட்டாய் வெளிப்பட்டு மனிதர்களேக் கவரலாம். ஆனல் மனிதர்களின் சுற்றுப்புற உணர்ச்சிதான் மனிதர்களைக் காப்பாற்ற முடியும். சூழ்ந்திருப்பவர்களின் சுகதுக்கங்களைப் புரிந்து கொண்டு வாழ்கிற மனிதன் எவனே அவன் வேறு எதையும் வாரி வழங்க முடியாதவளுக இருந்தாலும் அநுதாபத்தை மட்டும் வாரி வ்ழங்குகிற வள்ளலாகவாவது இருப்பான். பட்டினத்தின் பெரிய வீதிகளில் நான் சொல்லப் போவ தைப் போன்ற காட்சிகளை நீங்கள் அடிக்கடி பார்க் திருப்பீர் கள். பட்டப் பகலில் உச்சி வெய்யில் கொளுத்திக் கொண் டிருக்கும் வேளையில் ஏழெட்டுப் பேர் உட்கார முடிந்த பெரிய காரில் ஒரே ஒரு மனிதர் உட்கார்ந்து பயணம் செய்து போய்க்கொண்டிருப்பார். அவருக்கு வேண்டியவர்கள், தெரிந்தவர்கள், குழந்தைகள், சிறு பெண்கள், பள்ளிச் சிறு வர்கள் என்று நூற்றுக்கணக்கான மற்ற மனிதர்கள் அதே சாலையில் காலில் செருப்பு மின்றி வெய்யிலில் வேர்க்க விறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/36&oldid=825913" இலிருந்து மீள்விக்கப்பட்டது