பக்கம்:சிந்தனை மேடை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுற்றுப்புறத்தை உணர முடியாத மரத்தின் தன்மையி: லிருந்து மனிதனை வேறுபடுத்திச் சிறப்பாக்கிக் காட்டுவது எதுவோ அதுதான் கண்ணுேட்டம். உயர்ந்த மனப் பக்கு, விம் உள்ளவர்கள் பயிர்பச்சைகள் வாடுவதைக் கண்டு கூட மனம் நொந்து நிற்பார்கள். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வடலூர் இராமலிங்க அடிகள் அந்த உயர்ந்த நிலையை வெளியிடுகிரு.ர். ஆளுல் இன்றைய நகரங்களின் அவசர வாழ்க்கையில் சுற்றி வாழ்கிற வர்கள் விாடியிருப்பதைக் கண்டும்கூடப் பதிலுக்கு வாடத் தெரியாமல் ஒடிக் கொண்டிருக்கிருேம் நாம். சந்தர்ப்பங் கவின் வற்புறுத்தலாலும் பிழைக்க வேண்டிய வாழ்க்கை அவசரத்தாலும் வேகமாக வாழ்கிருேம். வேகமாக வாழ. லாம். ஆனல் மனிதத் தன்மையற்று வாழக் கூடாது எந்த எந்த இடத்தில் நடந்து போய்க் கொண்டிருக்கிருேமோ அந்தப் பாதையைப் பார்க்காமல் நடக்க முடியாததுபோல் எந்தச் சூழ்நிலையில் இருக்கிருேமோ அந்தச் சூழ்நிலையின் சுகதுக்கங்களிலிருந்து நம்மைப் பிரித்துக்கொண்டு தனியாக தாம் மட்டும் மகிழக்கூடாது. அப்படி மகிழும் மகிழ்ச்சி நியாயமானதாக இருக்க முடியாது. சுற்றுப்புறத்தோடு படர்த்து கொடியைப்போல் எல்லாக் கிளையிலும் மலர்ந்த படி வாழவேண்டும். கண்ளுேட்டம் நிறைந்த வாழ்க்கை என்பது இதுதான். அது தாபத்தைக் கூட உறவினர்கள் மேலும், தங்களுக்குப் பயன் படுகிறவர்கள் மேலும் செலுத்துகிற காரணக் கருணை சான்ருேர்களால் மதிக்கப்பட மாட்டாது. தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ கலந்து பழகிப் பேசி அல்லது கண்டு உணர்ந்து புரிந்து கொண்டு சுற்றுப்புறத்தோடு ஈடுபட்டு வாழவேண்டும். சின்னஞ் சிறு கிராமங்களிலும் ஆடம்பரங்கள் நுழை, பாத சிறிய ஊர்களிலும் சுற்றுப்புற உணர்ச்சி இயல்பாகவே. அமைந்திருக்கும். அகன்ற தெருக்களும் பெரிய வீடுகளும் ஒளி மயமான வாழ்க்கையும் உள்ள நகரங்களிலோ பக்கத் தில் குடியிருப்பவர்களுடைய ஊர் பேர் தெரியாமலே ஒல் வொரு குடும்பமும் தன் சுகத்திலும், நலத்திலும் மூழ்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/38&oldid=825917" இலிருந்து மீள்விக்கப்பட்டது