பக்கம்:சிந்தனை மேடை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வாழும். ஒரு வீட்டின் சுக துக்கங்கள் இன்னெரு வீட்டைச் சிறிதளவும் பாதிக்காது. அவ்வளவு ஏன்? ஒரு வீட்டின் சுக துக்கங்கள் இன்னெரு வீட்டுக்குத் தெரியக்கூட வழியின்றி வீடுகள் ஒவ்வொன்றும் நெருங்கியிருந்தும் உறவுகளும், உணர் வுகளும் பிரிக்கப்ப்ட்டிருக்கும். நகர வாழ்க்கையின் புதுமை களிலும் நாகரிகத்திலும், இப்படி உறவுகளாலும் பிரிந்து போயிருப்பது குறையாகப் படவில்லையாளுதலும் சுற்றுப்புற உணர்ச்சியற்றுத் தனித் தனிச் சுகங்களில் மூழ்கி வாழ்வது சரியில்லைதான். இப்படி நெருங்கி வசித்தபடியே பிரிந்து வாழ்கிற பட்டினத்து நாகரிகக் குறைபாடு என்ருவது ஒரு நாள் மாறித்தான் ஆகவேண்டும். இயல்பாகவோ, படிப் படியாகவோ அந்த மாறுதல் நிகழும் காலத்தை எதிர் பார்த்து நம்புவோமாக. பொதுக்கூட்டங்கள் பொதுக் கூட்டங்களும், சொற்பொழிவுகளும், இப் போது ஏராளமாக நடக்கிற வேகத்தைப் பார்த்தால் எதிர் காலத்திலே வேருெரு விநோதமான சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்று கூடப் பயப்படுவதற்கு இடமிருக்கிறது. பேச்சைக் கேட்கிறவர்கள் பலராகவும், நிகழ்த்துகிற வர்கள் சிலராகவுமுள்ள இன்றைய சூழ்நிலை மாறி உலகத்தில் பிரசங்கம் செய்கிறவர்கள் மட்டுமே பெருகி: பிரசங்கம் கேட் கிறவர்கள் எல்லோருமே அலுத்துப்போய்விட்டால் என்ன ஆகும் என்று வேடிக்கையாக ஆராய்ந்து பார்க்கலாமே! இன்னர் இறை வணக்கம் பாடுவார், இன்னர் தலைமை வகிப்பார், இன்னர் சொற்பொழிவாற்றுவார் என்று இப் போது நிகழ்ச்சி நிரல் அச்சிடுகிருற் போல எதிர்காலத்தில் இன்னின்னர் மட்டும் கடைசி வரை இருந்து சொற்பொழிவு கேட்பதற்கு இசைந்துள்ளார்கள்-என்று வேறு விதமாக நிகழ்ச்சி நிரல் அச்சிடுவதற்கும் நேரலாம். கேட்டு அநுபவிக் சி. மே, 3 . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/39&oldid=825919" இலிருந்து மீள்விக்கப்பட்டது