பக்கம்:சிந்தனை மேடை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கிறவ்ர்கள் அதிகமாகவும், பேசுகிறவர்கள் குறைவாகவும் இருந்த காலத்தில் பேச்சாளர் பெயரை மட்டும் நிகழ்ச்சி நிரலில் அச்சிட்டது பொருத்தமாயிருந்தது. கேட்கிறவர்கள் அல்லது கேட்கத் தயாராயிருக்கிறவர்கள், மிகமிகக் குறை வாகிப் போய்ப் பேசுகிறவர்கள் தொகை அதிகமாகிவிடும் காலத்தில் நிகழ்ச்சி நிரலிலே கேட்கிறவர்கள் பெயரை மட்டும் அச்சிடுவதுதான் பொருத்த மாயிருக்கும். இப்போது இருக்கிற சூழ்நிலையைப் பார்த்தால் அப்படியும் ஒரு காலம் வரும் போலத்தான் தோன்றுகிறது. தினசரிப் பத்திரிகை க்ளில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏதாவது ஒரு மூலையில் "இன்றைய சொற்பொழிவு நிகழ்ச்சிகள்' என்று சிறிய எழுத் துக்களில் மங்கலாக அச்சிடுவதற்குப் பதில் இன்றைய சொற் ப்ொழிவு நிகழ்ச்சிகளை மட்டும் அச்சிட்டாலும் அதுவே ஒரு முழுப்பத்திரிகையை நிரப்பிவிடும் என்பது போல் இருக் கிறது சூழ்நிலை. அவ்வளவு அதிகமான கூட்டங்கள் நாள் தோறும் நடைபெறுகின்றன. குதிரைப் பந்தயத்துக்கு ரேஸ் டிப்ஸ்” வெளியீடுகள் மாதிரி சொற்பொழிவுகளுக்கும் தனித்தனி வெளியீடுகள் வரலாம். "இன்ன குதிரை வெற்றிபெறும், இன்ன குதிரை வெற்றிபெருது என்று பந்தய முடிவுகளைப் பற்றி ஹேஷ்யம் கூறுவதைப் போல இன்றைய தினம் பேச்சில் இன்ஞர் வெற்றி பெறுவர்-இன்னர் வெற்றிபெற மாட்டார் - என்று சொற்பொழிவுக் குதிரைகளுக்கு (வேகமாகப் பேசும் ஆவே சப் பேச்சாளர்களுக்கு இந்தப் பெயர் மிகமிகப் பொருத்தும்) ஹேஷ்யம் கூறும் வெளியீடுகளும் வரலாம். கூட்டம் பலவிதம் இந்த நாட்களில் பொதுக்கூட்டங்கள் பலவகையாக நடைபெறுகின்றன. இலக்கியக் கூட்டம், அரசியல் கூட்டம், பாராட்டுக் கூட்டம், கண்டனக் கூட்டம், அதுதாபக் கூட்டம் என்று பேர்கள் தாம் வேறு வேருக இருக்கின்றன. எல்லாக் கூட்டத்துக்கும் பேசுபவர்கள் உண்டு என்பது மட்டும் சர்வ நிச்சயம். கேட்பவர்கள்?...இந்த இரண்டாவது தேவையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/40&oldid=825922" இலிருந்து மீள்விக்கப்பட்டது