பக்கம்:சிந்தனை மேடை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பெரிய பொதுக் கூட்டம்தான். விதி என்ற மேடையில் இன்பமும், துன்பமும் மாறி மாறிப் பேசுகிற நிகழ்ச்சி நிரலை யார் அமைத்தார்களோ .ெ த ரி ய வி ல் லே. சுகதுக்கப் பேச்சாளர்கள் மாறி மாறிப் பேசும் இந்ந உலகப் பொதுக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் பேச்சாளர்தான். இன்னும் நன்கு கூறினல் ஒவ்வொருவரும் கூடக் கேட்பவர்தான். சுகமோ, துக்கமோ, கூடப்பேசுவது குறையப் பேசுவது தான் அவரவர் பாக்கியத்தைப் பொறுத்த விஷயம். - திரைப்படச் சுகங்கள் விழிப்பில்லாத போது காண்கிற சொப்பனங்களைக் கனவுகள் என்று மன்னிக்கலாம். ஆனல் விழித்துக் கொண்டே'காண்கிற சொப்பனங்களும் உள்ளன. உழைப் பிலும், அநுபவப்பட்டு முன்னுக்கு வரவேண்டும் என்பதி லும் நம்பிக்கை குன்றி எந்தவிதத்திலோ மிகக் குறுகின காலத்தில் சொகுசான வாழ்க்கையை அடைய வேண்டும் என்ற ஆசை இப்போது இளைஞர்களிடையே பெருகி வரு கிறது. சொகுசான வாழ்க்கையை அடைய வேண்டும் என்று ஆசைப்பட எல்லோருக்கும் உரிமை உண்டுதான். ஆனல் நம்பிக்கையும், நாணயமான உழைப்பில் ஆர்வமும் குன்றிச் சொகுசான வாழ்க்கைக்கு மட்டும் ஆசைப்படுவது சமுதாயத்தின் நியாயமான பலத்தை நாளுக்கு நாள் நலிந்து போகும்படி செய்துவிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாட்களில் பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளி லும் படிக்கிற இளைஞர்களில் பெரும்பாலோர் சினிமாவில் வருகிருற் போன்ற கற்பனைச் சுகவாழ்வுக்கும், கற்பனைக் காதல்களுக்கும் அளவற்று ஆசைப்படுகிருர்கள் என்பதைப் .புரிந்து கொண்டால் நாளைக்கு உருவாக வேண்டிய சமுதாயத்தைப் பற்றி நமக்குப் பயமாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/47&oldid=825936" இலிருந்து மீள்விக்கப்பட்டது