பக்கம்:சிந்தனை மேடை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

・50 கொள்ளுகிற மாணவர்களுக்கே அவற்றில் நம்பிக்கை பதி வதில்லை. ஏதோ பழைய நூலாசிரியர்கள் பழைய உலகத்துக் குச் சொல்வி வைத்து விட்டுப் போன நீதிகள்; இன்றைய உலகத்துக்கு அவை பயன்படப் போவதில்லை என்பது போல் ஒரு சவிப்பு மனப்பான்மை எங்கும் பரவியிருக்கிறது. இப் படிப் பட்ட பனப்பான்மை நாட்டுக்கு நல்லதில்லை. இன்று திரைப்படக் கதைகளிலும், நாடகக் கதை களிலும், அந்தக் கதைகளில் வருகிற எவருடைய முன்னேற் றத்தைப் பற்றியாவது காண்பிக்கும் போது அந்த முன் னேற்றத்துக்கு உலகியல் ரீதியான வெறும் முயற்சிக் காரணங் களை விரைந்து காண்பிக்கிருர்களே ஒழிய அறமும், நேர்மை யும் சிறிதளவாவது துணை நிற்பதாகக் காட்டுவதில்லை. வ்குப் பறைகளில் ஆசிரியர்கள் நீதி போதனைப் பகுதிகளையும், அற நூற் கருத்துக்களையும் கற்பிக்கும் போது அவை சாரமற்ற வைகளாகத் தோன்றி மாணவர்களைக் கவரத் தவறுகின்ற்ன. நல்ல ஆசிரியர்கள் நல்ல சூழ்நிலையில் உள் மனத்திலிருந்து படிந்த பகுதிகளாகத் தேர்ந்தெடுத்துச் சொல்லிக் கற்பித் தாலும் அறநூற் கருத்துக்கள் இளம் பிள்ளைகளைக் கவர்ந்து இழுக்கத் தவறி விடுகின்றன. திரைப் படச் சுகங்களைப் போல் மின்னி மின்னி நேர்கிற சுகங்களுக்குத்தான் இன்றைய இளந் தலே முறை மனம் தாழ்த்த ஆசைப்படுகிறது. வயதானவர் கள், இளைஞர்கள். என்ற பாகுபாடு இதற்குத் தேவையில்லை. அறத்திலும், நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கை வைப்ப தற்கு வயது ஒரு காரணமும் ஆகாது. அவற்றில் நம்பிக்கை வைக்கிற இளம் பிள்ளேயே மனம் முதிர்ந்தவளுகத் தோன்ற வும், நம்பிக்கை வைக்காத வயது முதிர்ந்தவரே மனம் முதிராதவராகத் தோன்றுவதும் கூடும். திரைப்பட வளர்ச்சி போல் ஓடும் சுகங்களில் மயங்கும் பரிதாபகரமான சூழ்நிலை வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு ஆட்டுகிற தலைமுறை எதுவோ அது தேசத்தின் போதாத காலம், மின்னி மின்னி மறைய வேண்டுமென்று வேகம் வேகமான சுகங்சளுக்குப் பறந்து கொண்டு தவிப்பதைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/52&oldid=825949" இலிருந்து மீள்விக்கப்பட்டது