பக்கம்:சிந்தனை மேடை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. நிலையான நலத்துக்கு ஆசைப்படும் பரிபக்குவம் வருவது நாட்டுக்கே நல்லது. இந்த நாட்டின் எதிர்கால நலத்துக்கு. இப்படி ஒரு பரிபக்குவம் மிக மிக அவசியமானது. இவ்வாறு எழுதியிருப்பதனால் திரைப்படங்களும் நாட கங்களும் தமக்கென மேற் கொண்டு நிகழ்கிற கதையைப் பற்றிய விவாதப் பிரச்ன ஏதும் இங்கு எழுவதற்கு நியாய மில்லை. கலை உருவம்’ என்ற அமைப்பில் அவை கதாாபாத் திரங்களின் வாழ்க்கை வளர்ச்சியையோ, சுகதுக்கங்களையோ விரைவாகக் (ஓரளவு தடுமாருமல்) காட்டுவதற்கு உரிமை யுள்ளவைதாம். அவை அவ்வாறு காண்பிப்பதைக் கலையாக மட்டும் இரசிக்கலாம். வாழ்க்கையிலும் அதே அளவு வேகம் வேண்டுமென்று ஏங்கி நிற்கக் கூடாது. வெறும் துக்க நிகழ்ச் சிகளுக்காக அந்த வேகத்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார் கள். ஆனல் சுகங்கள் வரும்போது மட்டும் சினிமாக் கதை நிகழ்ச்சிகளைப் போல் வேகமாக வரவேண்டுமென்று பலர் ஆசைப்படுவார்கள். வேடிக்கையான ஆசைதான் இது! வேறென்ன சொல்வது? பாவம் ஆசிரியர்கள் இந்த சிந்தனை மேடையில் கல்விக் கூடங்களையும் ஆசிரி ஆயர்களையும் பற்றி எழுதுவதென்று தீர்மானமாகி விட்டது. ஒரே ஒரு நேயர் (அவரும் ஒரு பள்ளி ஆசிரியர்தான்) உங்கள் சிந்தனை மேடையில் கல்விக் கூடங்களையும், ஆசிரியர்களையும் பற்றிய சிந்தனைக்கு இடம் உண்டோ இல்லையோ என்று எழு திக் கேட்டிருக்கிருர். "தாராளமாக இடம் உண்டு’ என்று பதில் சொல்லிக் கொண்டிருப்பதை விடக் காரியத்தில் காண் பித்து விடுவதே நல்லதல்லவா? சிந்தனைகள் மலரவும். மலர்விக்கவும் காரணமாக இருக் கும் முதல் எண்ணம் தூய்மையான ஆசிரியன் எவனே அவனி ட்மிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். மகா முனிவர் கள் புண்ணிய நதிகளின் கரைகளிலே புல்லில் வேய்ந்த சின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/53&oldid=825950" இலிருந்து மீள்விக்கப்பட்டது