பக்கம்:சிந்தனை மேடை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 களிலும் செய்வதைப் போல் விருப்பு-வெறுப்பு-வேண்டிய வர்-வேண்டாதவர் நிலைகளைக் கொண்டு திடீர் திடீரென்று ஊதிய வளர்ச்சி (இன்க்ரிமெண்ட்)களைத் தந்து தூக்கி விடப் படலாம் என்ற அதிர்ஷ்ட நம்பிக்கை கூட ஆசிரியர் தொழி லில் இல்லை. திட்டமிடப்பட்ட எளிய ஊதியம் வீங்காமலும், மெலியாமலும் ஒரு சீராகக் கிடைப்பது தவிர (சில பள்ளிக் கூடங்களில் ஒரு சீராகக் கிடைக்காமல் இரண்டு மாதப் பாக்கி, மூன்று மாதப் பாக்கி நின்று விடுவதும் உண்டு) வேறு எந்த அதிர்ஷ்டக் கனவுகளுக்கும் ஆசிரியர் தொழிலில் இடம் இல்லை. மில்லில் வேலை பார்க்கிறவர் வருஷத்துக்கு இரண்டு மூன்று முறை போனஸ் கிடைக்கும் என்று நினைப்பது ப்ோல் ஆசிரியர் தொழிலில் நாளைய அதிர்ஷ்டம் என்று எதை நினைத்தும் அதிர்ஷ்டக் கனவுகள் காண்பதற்கு வாய்ப்புக்கள் அறவே இல்லை. தன்னிடம் படிக்கிற:பையன் காரிலே வந்து பள்ளிக் கூடத்தில் இறங்குவதைப் பார்த்துக் கொண்டே தான் வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்து கற்பிக்கிற பள்ளி ஆசிரி யன் மானிட சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட் டிருப்பதற்காகப் பெருமைப்படலாம். ஆனல் தன்னுடைய சுகதுக்கங்களே உற்று நோக்கித் தன்னை இந்தச் சமூகம் எவ்: வளவுக்கு மதித்துக் கொண்டிருக்கிறது?’ என்ற கேள்வியை அவன் மனம் அவனிடமே கேட்கத் தொடங்கி விட்டால் சிந் தனை அந்த இடத்தோடு அறுபட்டுப் போவதோடு மனமும் கண்களும் கலங்கிவிடும். ஓர் ஆசிரியனைச் சமூகம் எந்த அளவு மதிக்கிறது?’ - மிகவும் பரிதாபகரமான கேள்வி இது. தான் இந்தச் சமூகத்துக்கு வெறும் ஏணியாக இருந்து கொண்டிருக்கிருேம் என்ற உண்மை அந்த விநாடியில் அவனுக்குப் புரியத் தொடங்கி விடுகிறது. வேத காலத்து முனிவர்களும் அப்படித்தானே இருந்திருக்கிரு.ர்கள்?’ என் றெண்ணி இன்றைய ஆசிரியன் தன்னைத் தியாகியாகப் பாவித் 'துக் கொண்டும் திருப்திப் படமுடியாது. வேத காலத்து முனிவர்கள் புகழையும், பொருளையும் பற்றிக் கவலைப் படா மல் நாம் இந்த உலகத்தில் புத்தியின் பரம்பரையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/58&oldid=825959" இலிருந்து மீள்விக்கப்பட்டது