பக்கம்:சிந்தனை மேடை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. திருக்க வேண்டும் என்பதை மட்டும் கண்டிப்பாக நினைவு கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய ஆசிரியர்களுக்குச் சமூகத்தின் மதிப்பீடு போதவில்லை. இன்றைய கல்விக்கு ஒழுக்கமும் பண்பாடும் போதவில்லை. கற்பிப்பவர்க்கும் குறை. கற்பிப்பதற்கும் குறை. தீர்வதானால் இரண்டு குறையும் அல்லவா ஒருங்கு திர வேண்டும்? ஆசிரியர்களே மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. சமுதாய வாழ்வில் தங்களுடைய மதிப்பு இன்னும் பெருகவேண்டுமென்று அவர் கள் எதிர்பார்ப்பது நியாயமான கோரிக்கையே. எழுத்தறி. வித்தவனே இறைவனுக வணங்க முடியா விட்டாலும் போகி றது. ஆனல் தயவுசெய்து மனிதனகவாவது மதியுங்கள்! இன்று உருவாகிற புதிய பாரதத்தில் பள்ளிக்கூடங்கள் நாற் றங்கால்களைப் போன்றவை. நாற்றங்காலிலேயே கெட்டுப் போகிற பயிர் நடுகைக்குப் பயன்படுமா? நாற்றங்காலேயும் பயிரையும் சேர்த்தே பேணவேண்டுமல்லவ்ர்? காலம் தேய்த்த கலைகள் கலைகள் என்றும் அழியப் ப்ோவதில்லை; ஆனால் அவற். றின் நோக்கமும், பயனும், காலந்தோறும் மாறிக் கொண்டே போவதுண்டு. சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற நளின கலைகள் பல நூற்ருண்டுகளுக்கு முன் என் னென்ன இலட்சியங்களை எல்லையாகக் கொண்டிருந்தனவோ அந்த இலட்சியங்களும், அவற்றின் எல்லைகளும் இன்று சுருங் கிப் போயிருப்பதைக் கண்கூடாகக் காண்கிருேம். இந்தச் சுருக்கத்துக்குக் காரணம் என்ன? "வேலை செய்தால் கூலி-கூலி கொடுத்த அளவுக்கு வேலை-என்று தொழிலும் பயனும் அருகருகே வைத்துக் கணக்கிடப்படுகிற நூற்ருண்டில் சிற்பமும், சித்திரமும், சங் கீதமும் எந்த அளவுக்குப் பாதிக்கப் பட்டிருக்கின்றன என் பதைச் சிந்திக்கலாம். தொழிலும் கலையும் ஒன்ருக முடி யாத தனித் தனித் துறைகள். ஒரு தொழிலைச் செய்கிறவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/61&oldid=825967" இலிருந்து மீள்விக்கப்பட்டது