பக்கம்:சிந்தனை மேடை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%4 நின்றுவிடுகிரு.ர்கள். க லே த் துறையில் ஈடுபட்டிருப்ப்வ ஆணுடைய வாழ்க்கையில் பரிதாபத்துக்குரிய இடம் இப்படிப் பின்தங்கி விடுகிற சமயம்தான். கலைகள் தெய்வங்களைப் போன்றவை. ஒரு சிலர் வழிபடுவதை நிறுத்தி விட்டாலும் வேறு பலர் தங்களை எப்போதும் வழிபாடு செய்யும்படி ஆக் கிக் கொள்ளும் நிலையான கெளரவம் அவைகளுக்கு உண்டு. ஆனல் கலைத் தெய்வத்தை வழிபட்டுப் பயன் கிடைக்காமல் மனம் தளர்ந்த கலைஞர்களின் சொந்த வேதனைகளை யார் தவிர்ப்பது என்ற கேள்வி எழும்போதுதான் சிக்கலாயிருக் கிறது. இந்தச் சிக்கல் முன்பு தகுதி வாய்ந்த ஆதரவுகளால் பேணப்பட்டு இன்று தன் உழைப்பே தனக்கு ஆதரவு’ என் பது போல் கைவிடப் பட்டுள்ள எல்லாக் கலைஞர்களுக்கும் -உரியதாகத்தான் இருக்கிறது. ஆனல் சிற்பக் கலையைப் போலப் பழக்கத்திலே அருகி அரிதாய்ப் போய் விட்ட சில கலைகளுக்கு இந்த மாறுதல் இழப்பைத்தான் கொடுத்திருக் கிறது என்பதில் வேறு விதமான கருத்துக்கு வழியே இல்லை. விக்கிரக வார்ப்பு, சிலை செய்தல் போன்ற அபூர்வமான கலேப் படைப்புக்களைக் காப்பாற்றுவதற்காகவாவது அந்தத் துறையைச் சேர்ந்த கலைஞர்களையும் நாம் காப்பாற்ற வேண் டும். எங்கும் கிடைக்காமல் போய் விட்ட சில அருமை யான மூலிகை களைத் தேடிக் கண்டு பிடிப்பது போல்தான் இன்று இந்தக் கலைகளில் வவ்லவர்களைக் காண்பதும் அரிதா யிருக்கிறது. நாம் தேடிக் கண்டுபிடிக்கிற இரண்டொரு வல் லவர்களும் மேற்கண்டவாறு தங்கள் குறைகளை அலுத்துக் கொள்கிறவர்களாயிருக்கிருர்கள். கு ைற க ள் இருக்கும் போது அவற்றை அலுத்துக்கொள்ளாமல் மறைத்துவிட்டு, "நாகரிகமாயிருந்து ஏமாற்றுவதும் நியாயமில்லைதான். அந்தக் கலைஞர்களுடைய பொறுமையையும் பெருந்தன் மையையும் சோதனை செய்வது போல் சமூகமும் அவர்களே விட்டு விடக் கூடாது. இன்று செழிப்பாயிருக்கிற பலகலை களும் நாளை இதே நிலைக்குப் ப்ோய்விடலாம். கலைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/66&oldid=825977" இலிருந்து மீள்விக்கப்பட்டது