பக்கம்:சிந்தனை மேடை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 றில் ஒரு புதிய யுகத்தைப் படைக்கிற எழுத்தாளர்களையும் நாம் கண்டிருக்கிருேம். ஆனல் இன்று ஒரு யுகத்தின் நீண்ட வரலாற்றில் தாங்களும் மறைந்து போய்விடுகிற எழுத் தாளர்களைத்தான் அதிகமாகப் பார்க்கிருேம். நல்ல எழுத்துச் சமூகத்துக்கு மருந்து ப்ோன்றது. சமூகத்தில் உள்ளவர்களே இதை மறந்தாலும் எழுத்தாளன் மறக்கக் கூடாது. ஏனென்ருல் எழுதுகிறவனுடைய பொறுப்புப் படிக்கின்றவனுடையதை விட அதிகம். நிச்சயமாக அதிகம். மாணவ வாழ்க்கை முன்பு ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிச் சிந்தித்தோம். சிறிய இடை வேளைக்குப் பின் இப்போது மீண்டும் மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கப் போகிருேம். இன்று இந்தத் தேசத்தில் மாணவ வாழ்க் கையைப் பற்றிச் சிந்திக்க ஏதாவது இருக்கிறதா?-என்று: குறும்பு நிறைந்த கேள்வி ஒன்று செவிகளில் விழுகிறது. இந்தக் கேள்வியில் உள்ள குறும்பைப் பொருட்படுத்தாமல் கேள்வியை மட்டுமே பொருட்படுத்திக் கொண்டு சிந்திக்க லாம். - இன்று உருவாகிற மாணவர்கள் நாளைக்கு இந்தத் தேசத்தை நிர்வாகம் செய்யப் போகிறவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது'-என்று பள்ளிக்கூடங்களின் ஆண்டு விழாக்களில் தலைமை வகிக்கிறவர்கள் வழக்கமாகச் சொல்வி வைக்கிற வாக்கியமும் அதன் பொருளும் பொய்யில்லைதான். ஆளுல் மேடைகளில் பேசுவதைவிடவும் அதிகமாகக் கவலைப் பட்டுச் சிந்திக்க வேண்டிய பிரச்னை இது. பள்ளி. கல்லூரிப் படிப்பும் அவற்ருேடு இணைந்த ஹாஸ்டல் வாழ்க்கையும் பெரிய நகாங்களில் உள்ள :போர்டிங் அண்டு லாட்ஜிங் ஒட்டல்களைப்போல் மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/72&oldid=825990" இலிருந்து மீள்விக்கப்பட்டது