பக்கம்:சிந்தனை மேடை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மாறிய நோக்கம் எழுத்தையும், மொழியையும், நூல்களையும் கற்கும் பயன் பழைய காலத்தில் எப்படி அளவிடப் பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். எழுத்தறியத் திரும் இழிதகைமை, தீர்ந்தால் மொழித்திறத்தின் முட்டறுப்பானுகும் -மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்’ என்று இவ்வாறு கல்விக்கும், மாணவ வாழ்க்கைக்கும் முடி வான பயனக மெய்யுணர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இன்று ஒரே நோக்கம் பின்னல் எப்படி வாழ்க்கை அமைத் துக் கொள்வது என்பதற்கு ஏற்ற தொழில் உணர்வுதான். என்ஜீனியரிங் துறையில் படிப்பவர்களுக்குக் கலைத்துறைப் படிப்பைப் பற்றிய அக்கறை வேண்டியதில்லை போலவும், கலைத்துறையில் படிப்பவர்களுக்கு என்ஜீனியரிங் பற்றி அக்கறை வேண்டியதில்லை போலவும் படிப்புக்கு எல்லை வகுத்துப் பாத்தி கட்டியிருக்கிற காலம் இது. மனத்தைச் சிறிது சிறிதாய் மலரச் செய்து மணக்க வைக்கிற மாணவ வாழ்க்கைதான் இலட்சிய மாணவ வாழ்க்கை. மாணவர் களின் கவனங்களை வேறு துறைகளில் கவர்ந்து பாழாக்கி விட முடியாதபடி தனியான மலைச்சாரல்களிலும் இயற்கை யழகு மிக்க ஆற்றங்கரைகளிலும் (Rural பniversities) நாட்டுப் புறப் பல்கலைக் கழகங்கள் ஏற்பட வேண்டும். தனிமையின் இனிமையில் ஈடுபட்டுக் கற்க வேண்டுமென்று தவிக்கும் மாணவர்களுக்கு அவை பயன்படும். - பாரதி, தாகூர், போல் கவிகளையும், விசுவேசுவரய்யா, வி. பி. போல் மேதைகளையும் ஏ. எல். முதலியார் போல் மருத்துவ வல்லுநர்களையும், மறுப்டியும் இந்த நாட்டுக்கு உண்டாக்கித் தருகிற சக்தி வாய்ந்த மாணவ வாழ்க்கை வேண்டும். வயிற்றை நிரப்பிக் கொள்ள ஹாஸ்டலும், ஆசிரியர்களை விதவிதமாய்க் கேலி செய்ய வகுப்பறைகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/74&oldid=825994" இலிருந்து மீள்விக்கப்பட்டது