பக்கம்:சிந்தனை மேடை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி கண்ட பெண்மை உலகத்தின் முதன்மையாகவும் சரி, இறுதியாகவும் சரி, பெண் வணக்கத்துக்குரியவள் என்பதை அநேகமாக எல்லாரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சிந்தனைக்கு இதுதான் எல்லைப் புள்ளி என எதுவும் வரம்பு கிடையாது. ஆனாலும் எந்த இடத்திலாவது அது அழகாக வும் அளவாகவும் நிறைய வேண்டுமல்லவா? இந்த இடத்தில் பாரத நாட்டின் தாய்த் திருக்குலமாகிய பெண்களின் புதிய தலைமுறை வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை நிறைவாகச் சிந்திக்கலாம். - - ஒரு நூற்ருண்டுக் காலத்துக்கு முற்பட்ட பாரத நாட்டுப் பெண்ணின் சமுதாய வாழ்க்கைக்கும் இன்றைய பாரத நாட்டுப் பெண்ணின் சமுதாய வாழ்க்கைக்கும் நடுவே எத்தனை எத்தனையோ மாறுதல்கள் உண்டு. ஒரு நூற்ருண்டுக் காலத்துக்கு முன்பு இந்த நாட்டுப் பெண்ணின் சமுதாய வாழ்க்கை மிகவும் சுருங்கிய எல்லைகளுக்கிடையே இருந்தது. இன்று அந்த எல்லைகள் ஒரளவு விரிவடைந் திருக்கின்றன என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. புதிய தலை முறையில் பெண்களின் நிலையைப் ப்ற்றிச் சிந்திக்கிற இந்தச் சமயத்தில்தான் பெண்மைப் புகழ் பாடிய மகாகவி பாரதி யின் நினைவும் வருகிறது பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா என்று பரந்த மனப்பான்மையோடு தாய்த்திருக் குலத்தை வாழ்த்திய கவியரசனே நினைத்துப் பெருமைப்பட இந்த நாட்டுப் பெண்ணினத்துக்குத்தான் அதிகமான உரிமை உண்டு. பாரதி பெண்களின் கட்சி பேசுகிற ஆண்மை வீரர். இப்படி அவர் பெண்களின் கட்சி பேசுகிற இரகசியத்தை அவருடைய கவிதைகளே பல இடங்களில் பறை சாற்றுகின்றன. பாரதிக்கு முன்பு மாபாரதக் கதை யைப் பாடிய அத்தனை கவிகளும் பாரதத்தின் எல்லாக் கதா பாத்திரங்கள் மேலும் சிறப்பாகப் பாண்டவர்கள் மேலும் கவனமும் கருணையும் செலுத்தியிருக்கிருர்கள். ஆனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/77&oldid=826000" இலிருந்து மீள்விக்கப்பட்டது