பக்கம்:சிந்தனை வளம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 99.

நடப்பது துன்பம். அதனால் சகுனியாகவே நடந்து கொள்வோம்’ என்று எண்ண வைப்பதுபோல், ஆழமின்றி அமைந்து விடுகின்றன. எந்தப் பிரச்சார சாதனமும் நே எதிராகவே பயனளிக்கிறது இன்று. அதாவது "Counter Productive -gga g)(5#6 pgi sääral .

நடந்த ஒரு சம்பவத்தால் இதை விளக்கினல் ஒரு வேளை உங்களுக்கு நன்ருகப் புரியலாம்.

ஒரு கிராமத்தில் இரண்டாவது ஆட்டம் சினிமாப் பார்த்துவிட்டுத் திரும்பிய இரண்டு இளேஞர்கள், தங்களைப் போலவே சினிமா பார்த்து விட்டுத் தனியே திரும்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணே வழி மறித்துக் கெடுத்து விட்டார்கள் என்று பத்திரிகையில் படித்தேன். அந்த இளைஞர்கள் பார்த்த சினிமாவிலும் ஒரு கற்பழித்தல் காட்சி வந்திருக்கலாம். அதற்காகக் கற்பழித்தலைச் செய்த வர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவது போலவும்கூட ஒரு காட்சி படத்தின் கடைசியில் வந்திருக்கும்.

ஆனல், படம் முடிந்து வெளியே வரும்போது அந்த இரு இளைஞர்கள் மனத்திலும், எந்தப் பெண்ணிடமும் அத்து மீறி நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவோம்’ என்ற உணர்வு இருக்கவில்லை. -

'சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தப் பெண்ணிடமும் அத்துமீறி நடக்கலாம்’ என்ற உணர்வே மீதுTர்ந்து இருந் திருக்கிறது. இதுதான் இன்றைய கலையிலுள்ள மிகப் பெரிய

கோளாறு. -

இன்று நமது கலைகள், கதைகள் எல்லாம் திருந்துவதற்கு உதவுவதில்லை. மேலும் மேலும் தவறு செய்வதற்கே உதவு கின்றன. தவறு செய்வதைக் கண்டிப்பது போல் நியாயப் படுத்தவே உதவுகின்றன. தவறுவதோ தவற்றுக்கு ஆளாக்கப்படுவதோ, அத்தனை பெரிய பாவம் ஒன்றுமில்லை என்பதுபோல், உறுதியை நீர்த்துப் போகச் செய்யும் மெத்தன நிலையே வளர்கிறது. -

முன்பு, அறம் செய விரும்பு’ என்பது போல் நேரடியாக உபதேசம் செய்த முறை இன்று பத்தாம் பசலித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/101&oldid=562343" இலிருந்து மீள்விக்கப்பட்டது