பக்கம்:சிந்தனை வளம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 2 சிந்தனை வளம்

ஹைவே 303 போன்ற பாங்க் கொள்ளை சம்பந்தமான படங்கள் வந்தபின் அதே பாணியில் எத்தனை பாங்க் கொள்ளைகள் இந்தியாவில் நடந்துவிட்டன?

பொதுவாக மேல் நாடுகளில் காமிக்ஸ், ஜேம்ஸ்டாண்ட், கிரைம் திரில்லர்ஸ், துப்பறியும் கதைகள் எல்லாம் சமூகத் தையும், மனிதர்களையும், நீங்கள் எந்தெந்த வகையில் எதிரிகளையும், சூழ்ச்சிகளையும் சந்திக்க நேரிடலாம்’ என்று உணர்த்தி அவர்களே அதற்கேற்ப விழிப்புடன் இருக்கச் செய் யும் முயற்சிகளாகவே வெளி வருகின்றன.

இங்கோ அந்த நோக்கம் நேர்மாருகத்தான் பயன்படு கிறது. நீங்கள் எந்தெந்த வகையிலெல்லாம் தவறுகள் செய்யலாம்’ என்பதை விளக்கவே கதைகள், திரைப்பட்ங் கள் போன்ற கலைகள் இங்கே பயன்படுவது போல் தோன்று கின்றன. முயற்சி செய்து உழைத்து முன்னேறினுல்தான் நியாயமான வளர்ச்சி வரும்’ என்று மக்களை எண்ண வைப் பதைவிட, நீ ஓர் ஏழை இளைஞயிைருந்தால் ஒரு பணக்கார மில் முதலாளி மகளைக் காதலித்து அந்த மில்லின் உரிமை யாளராகவே வந்து விடலாம் அல்லது ஏழைப் பெண் (அழ கிய)ணுயிருந்தால், பணக்கார மில் முதலாளியின் மகனைக் காதலித்துப் பங்களாவுக்கு எஜமானியாகி விடலாம். முன் னுக்கு வருவதற்குப் பணமுள்ள யுவதி அல்லது இளைஞனைக் காதலிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போன்ற ஒரு ஃபார்முலா இங்கே சராசரியாகத் திரைப்படங்களில் காட்டப்பட்டிருப்பதால், எல்லா இளைஞர்களும் அதையே நம்பியிருப்பது போல் சோம்பேறிகளாக்கப்பட்டிருக்கிருர் களோ என்று கூட நமக்கு ஒரு சந்தேகமே வருகிறது. சிலருக் குக்காதல் ஒருவாய்ப்பாக நேரலாம். ஆனால், சகலருக்கும் அதுவே நம்பிக்கையாகி விடாது.

ஒரு கதாநாயக இளைஞன் சோளக் கொல்லையைக் கூடக் காவல் காக்கத் தெரியாமல் வயல் வரப்புக்களில் பாட்டுப் பாடிக் கோட்டை விடுகிறவனுக இண்டர்வெல்’ வரை சித்தரிக்கப்பட்டு இடைவேளை முடிந்ததும், திடீரென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/104&oldid=562346" இலிருந்து மீள்விக்கப்பட்டது