பக்கம்:சிந்தனை வளம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சிந்தனை வளம்

குறைய நூற்று இருபத்தைந்து சர்வகலா சாலைகள் என்ப தாக நினைவு. இவை அறிவையும்-அறியாமையையும், கல்வியையும்-கல்லாமையையும், திறமையையும்-திறமை யின்மையையும் சேர்த்தே வளர்த்திருக்கின்றன என்று. சொல்வதுதான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இதைப் பூசி மெழுக வேண்டிய அவசியமில்லை.

இங்கே மாதிரிக்கு ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றில், சமீபத்து ஆண்டுகளில் மருத்துவப் பட்டப் படிப்பு முடித்து. வாங்கிய எம். பி. பி. எஸ். டிகிரியுடன் ஒரு மாணவர் மேற். படிப்புக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் அமெரிக்கா சென்ருர், அமெரிக்காவில் இந்த எம்.பி.பி.எஸ். மேற்படிப்புக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் இவர் சேர்ந்த நிறுவனத்தில் இவரை யும், இவரைப் போன்ற வெளிநாட்டு மாணவர்களையும். கவனித்து வந்த பேராசிரியர் ஒருவர். இவருக்கு மருத்துவத். glao splift optiblf offlal (elementary knowledge)é, L இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, நிறுவனத்தில் தனக்கு மேற்பட்ட இயக்குநரிடம் புகார் செய்தார். இயக்குநர் உடனே, இந்த எம். பி. பி. எஸ் டிகிரியில் கையெழுத்திட்டிருந்த, இந்தியாவைச் சேர்ந்த அந்தக் குறிப்பிட்ட யூனிவர்ஸிடி வைஸ்-சான்ஸ்லருக்குக் கோப. மாகக்கடிதம் எழுதினர்:

'இவருக்கு உண்மையிலேயே உங்கள் யூனிவர்விடி எம். பி. பி. எஸ். டிகிரி வழங்கியிருக்கிறதா இல்லையா என்பதை இக்கடிதம் கண்டதும் உடனே தெளிவு படுத்துங். &6ir. Iam afraid to say...that he is thoroughly ignorant; of the subject.”

கடிதம் கிடைத்ததும் இந்தியாவில் அந்தப் பாவத்தைச் செய்த சர்வ கலாசாலையின் துணைவேந்தர் கர்மமே!’ என்று தலையிலடித்துக் கொண்டு பதில் எழுத நேர்ந்தது :

"நீங்கள் குறிப்பிட்ட மாணவர் எங்கள் சர்வ கலாசாவை: யில் உண்மையிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/108&oldid=562350" இலிருந்து மீள்விக்கப்பட்டது