பக்கம்:சிந்தனை வளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

遭伊8 சிந்தனை வளம்

பல கல்லூரிகளில் புரொபஸர்களாகவும், துணை உதவிப் புரொடலர்களாகவும், இருந்த பி. எச். டி. களும் அநுபவஸ் தர்களுமாகச் சுமார் அறுபது பேர் விண்ணப்பித்திருந்தார் கள். நிபுணர்கள் குழு (Experts teaா) வுக்கு முன் இண்டர்வியூ நடந்தது. வந்திருந்த அறுபது பேரும் விளம் பரத்தில் கோரிய தகுதி முழுமையும் பெற்றிருந்தனர்.

வந்திருந்த 60 பேராசிரியர்கள் 50 நிமிஷத்துக்குள் இண்டர்வியூ செய்யப் பட்டார்கள். திறமையையோ, தகுதியையோ அறிய முடிந்த எந்தக் கேள்வியும் அவர் &Gifill-lb Gäll-gi'. Li sīājāj. “What is your name? When did you take your M. A. degree? How old are you?’’— என்பன போன்ற கான்வெண்ட் ஸ்கூல் குழந்தைகள் கற்கும் கிளிப்பிள்ளைக் கேள்விகளே அனைவரிடமும் கேட்கப்பட்டன.

“We will Het you know the result” grgårp, usrojöln கேட்காத கேள்விக்குச் சொல்லப்பட்ட பதிலுடன் 60 பேரும் 50 நிமிஷத்தில் பேட்டி காணப்பட்டபின், இண்டர்வியூ வுக்கு முந்திய தினமே வெளி வந்த சர்வ கலாசாலைப் பரீட்சை ரிஸ்ல்ட்டில் ஹைலெகண்ட் கிளாஸில் அப்போது தான் பாஸ் செய்திருந்த ஒருவருக்கு-அவருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு நிறைந்த சிபாரிசு கருதி, அந்தப் பதவி தரப்பட்டது. இதற்கு ஏன் இத்தனை எக்ஸ்பர்ட்கள் கூடி இண்டர்வியூ செய்ய வேண்டும்? எதற்காகப் பத்திரிகை களில் எல்லாம் ஜம்பமாகவும், ஜபர்தஸ்தோடும் தண்டச் செலவு பண்ணி விளம்பரம் செய்யவேண்டும்? இது மாதிரி எக்ஸ்பர்ட்டுகள் இருக்கிற வரை இந்த நாடும் இதன் பல்கலைக் கழகங்களும், படிப்பும், பட்டங்களும் எப்படி உருப்படும்? . . .

இன்னொரு தென்னிந்தியப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்த ஒருவர் வெறும் எம். ஏ. மட்டும் தான். அவருக்குக் கீழே வேலை பார்த்த பலர் பி. எச். டி.க்கள். அவருடைய வி. ஸி. பதவிக்காலம் முடிந்ததும் அரசியல் செல்வாக்கால் நாட்டின் எல்லா வி. ஸி. க்களையுமே கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/110&oldid=562352" இலிருந்து மீள்விக்கப்பட்டது