பக்கம்:சிந்தனை வளம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 1 2 3

அன்று திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் பத்தாம் பசலித்தனமானவர். நாம் நவீன காலத்தில் வாழுகிருேம்’ என்று புது உரைகள் கூறுகிருேம். ஆனல் அந்தப் பரிமேலழகரிடம் இருந்த வார்த்தைச் சிக்கனம் இன்று நம்மிடம் இல்லையே?

மானம் :- தாழாமை-தாழ்வுவரின் வாழாமை' என்று மானத்துக்குச் சிக்கனமாகவும் கச்சிதமாகவும் உரை எழுதிப் பதசாரம் சொல்லியிருக்கிருர் அவர். இன்று மானம்’ என்ற தலைப்பில் தம்மூர்க் கோடையிடிப் பேச் சாளர்களில் யாராவது ஒருவரைப் பேசச் சொல்லி மேடை யில் நிறுத்தினால், அதைக் கேட்கிறவர்களின் மானமே போய்விடும். கோடையிடி’ பாணிக்கு ஒரு ஸ்பெஸிமன்’ பார்க்கலாமா?

‘மானத்தை வடவர் தானம் கொடுத்துப் பெறுமளவு நாம் ஈனப் பிறவிகளில்லை என்பதைத் தாய்மேல் ஆணை யிட்டுத் தமிழ்மேல் ஆணையிட்டுக் கூற விரும்புகிறேன் சோழன் கண்ட மானம், பாண்டியன் பார்த்த மானம், சேரன் சுவைத்த மானம் நம் இலக்கியங்களின் தனிச் சொத்து. தமிழ் மக்களுக்கே உரியது (மற்றவர்களுக்கும் இருக்கக் கூடாதா?) தாரணி புகழ்வது, சரித்திரம் பேசுவது இரத்தத்தோடு ஊறிப் போனது. புறநானூறு பேசும் மானம். சிலப்பதிகாரம் செப்பும் மானம்...... -என்று இப்படியே 100 மணி நேரம் பேசினலும் தாழாமைதாழ்வரின் வாழாமை’-என்று நான்கே நான்கு வார்த்தை களில் அதற்குக் கிடைத்திற்கும் கச்சிதமான விளக்கம், இTடு! மணி நேர விளக்கத்தில் அதற்குக் கிடைக்க முடியாது.

மொழியின் வார்த்தைகளை மந்திரம்போல், நோக்கமும் பயனும் சிக்கனமும் உள்ளதாகப் பயன்படுத்துகிறவனே அறிஞன். ஆனல், அவர்களின் எண்ணிக்கை இன்று மிகவும் குறைவு. . & " . . .

சுடத் தெரியாத கத்துக்குட்டி வேட்டைக்காரனப் போல் ஆயிரம் துப்பாக்கி ரவைகளை வீளுக்கியும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/125&oldid=562367" இலிருந்து மீள்விக்கப்பட்டது