பக்கம்:சிந்தனை வளம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - சிந்தனை வளம்

குருவியைக்கூடச் சுட முடியாமல் பதங்களே வீளுக்குகிற சுபாவம் மொழி அறிஞனுக்கு ஆகாது.

"மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்’-என்று பாரதியாரும் சொல்லுக சொல்லில் பயனுடைய’-என்று திருவள்ளுவரும் கூறியிருக்கும் சொற் சிக்கனத்தைப் பற்றி நாம் கவலைப்ப்டுவதில்லை.

ஜனகனுடைய சபையில் இராமன் வில்லை ஒடித்ததை இரண்டாயிரம் வார்த்தைகளில் வர்ணித்திருக்கலாம். ஆனல், கம்பன் அதை, எடுத்தது கண்டார் இற்றது கேட் டார்-என்று கண்டது கேட்டது” என்னும் 2 அம்சங்களே நான்கே வார்த்தைகளில் விவரித்த சொற் சிக்கனத்தை வைத்தே அவனே மகாகவி என்று புகழலாம்.

சிறு குச்சியால் அடிக்க முடிந்ததைக் கொல்லப் பீரங்கி யைத் தேடுவதும், பீரங்கியால் சுட வேண்டியதற்குத் தீபாவளித் துப்பாக்கியே போதுமென்று நினைப்பதும் பேதைமை. எதற்கு, எந்தச் சொல், எப்படிப் பயன்படும் என்கிற வார்த்தைப் பிரக்ஞை மிக மிக முக்கியம்.

நூற்றுக்குத் தொண்ணுாற்ருென்பது தமிழ்ப் பிரசங்கங் களைக் கேட்கும் போது சக்கை ஆக இருப்பதற்குக் காரணம் சொல் ஊதாரித்தனமே.

அரசியலில் ஒரளவு தங்களுடன் கருத்து ஒற்றுமை உள்ள மக்களை, உயிரே! இரத்தமே! சதையே! குடலே! குருதியே’-என்று அழைப்பது போன்ற "நான் வெஜிடேரி யன் லவ் தான் ஒரு சொற்பொழிவின் முக்கால் பாகமாக இருக்கிறது இங்கே. . . "

வேறு ஒரு வார்த்தையால் அந்த வார்த்தையை வெல்ல முடியாதபடி சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுங் கள்-என்ற திருவள்ளுவரின் அறிவுரையைக் கடைப் பிடித் தால் போதும். தமிழ் மொழியில் சொற் சிக்கனம் தானே வந்துவிடும். -

ஒரு மொழியின் வளர்ச்சி, அல்லது ஆற்றல் அந்த மொழிக்குக் குறைந்த வார்த்தைகளால் அதிக அர்த்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/126&oldid=562368" இலிருந்து மீள்விக்கப்பட்டது