பக்கம்:சிந்தனை வளம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 34 சிந்தனை வளம்

தாரம் பாதிக்கப்படுகிறது. சின்னஞ்சிறு அச்சக உரிமை யாளர் முதல், மிகப் பெரிய தொழிலதிபர்கள் வரை பவர்கட் அறிவிப்பு வந்தவுடன் தலையில் கையை வைத்துக் கொண்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடுகிருர்கள்.

இந்த முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் எங்கெங்கே ஹைட்ரோ எலெக்டாக்' திட்டங்கள் சாத்தியம், எங்கெங்கே அனல் மின்சாரத்திட்டங்கள் சரித்தியம் என்பது பற்றித் திசை திருப்பாமல் பொறுப்போடு யோசித்திருந்தால் உற்பத்திக் குறைவைத் தவிர்க்கலாம். ஆனால், பொறுப் போடும் அக்கறையோடும் யாரும் அதைக் கவனிக்கவில்லை. "இதை ஏன் செய்ய முடியவில்லை’ என்பதற்குப் பின்னல் விளக்கம் சொல்லி விவரித்துப் பேசிக் கொண்டிருக்கும் தலைவர்கள்தான் இங்கு அதிகமே தவிர, இதை உடனே செய்தாக வேண்டும்’-என்று அவசிய, அவசரமுள்ள ஒரு வெகுஜன நலனுக்கான திட்டத்தில் கண்ணும் கருத்துமாகச் செயல்படக் கூடிய தலைவர்களோ, அதிகாரிகளோ இங்கு மிக மிகக் குறைவு. ஒன்றை அவ்வப்போது தட்டிக் கழிக்கவும், நிரந்தரமாகத் தட்டிக் கழிக்கவும், ஞாபகம் வைத்திருந்து விடாக் கண்டன் கொடாக் கண்டனக'த் தொந்தரவு செய்பவர்களைத் திசை திருப்பிவிடவும் இந்திய அதிகார வர்க்கத்தினர் பயிற்சி பெற்றுத் தேறி இருப்பது போல், அத்தனை தூரம் பயிற்சியும் தேர்ச்சியும் உள்ளவர் களை உலகெங்கும் தேடினலும் கிடைக்க மாட்டார்கள்.

1. கூடிய வரை குழப்பி விடுவது, 2. பதில் சொல்லா மல் தவிர்ப்பது, 3. தவருக வழி காட்டுவது, 4. இழுத் தடித்து அயரப்போடுவது 5. தேடி வருபவர்கள் பொறுமை இழந்து தாங்களே திரும்பிப் போகும்படி செய்து விடுவது , 6. விஷயத்தை முற்றிலும் திசை திருப்பி விடுவது-ஆகிய அரிய பெரிய விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் இந்திய அதிகார வர்க்கத்தினரின் சாதனப் பட்டியலில் வரும் அம்சங்களில் சில ஆகும். .

இந்த அரிய சாதனைகளில் மந்திரிகளுக்கும், தலைவர் களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கூட அவர்கள் பயிற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/136&oldid=562378" இலிருந்து மீள்விக்கப்பட்டது