பக்கம்:சிந்தனை வளம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. நிழல் யுத்தங்கள்

நம் நாட்டிலுள்ள தலைவர்கள், பிரமுகர்கள், அரசியல் வாதிகள், சமுதாய சீர்த்திருத்தவாதிகள் முதலியவர்களின் செயல்களைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விநோதமான உண்மை முதற் பார்வையிலேயே நமக்குத் தெரிந்துவிடும். ஒருவகையில் எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், நாடகா சிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் முதலிய கலைஞர் களும்கூட இந்தப் பார்வையில் அகப்படுகிருர்கள்,

பெரும்பாலான சமயங்களில் பிரச்னைகளை எதிர்த்துப் போரிடுவதைவிட, அவற்றின் நிழல்களை எதிர்த்துப் போரிடு வதும், போரிடுவதுபோல் பாசாங்கு செய்வதும் ஒரு வழக்க மாகி விட்டது. சில சமயங்களில் எவற்றின் நிழல்கள் என்றே தெரியாத, எவற்ருேடாவது போரிடுவதும் உண்டு. வரவர இப்படிப்பட்ட போர்கள்தான் இங்கு அதிகமாகி வருகின்றன.

நிஜச்சண்டைகளில் போரிட்டு வீரர்கள் ஆவதை விட இப்படி நிழற் சண்டைகளிலே போரிட்டு வீரர்கள் ஆகி விடுவது மிகவும் சுலபமாக இருக்கிறது. நிழல்களோடு போரிடுவதில் ஒரு பெரிய வசதி, எதிர்த் தாக்குதலைச் 'சமாளிக்க வேண்டிய சிரமமும், அவசியமும் இல்லாமலே வெற்றி வாகை சூடி விட முடியும், அதே சமயம் எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு, ஏதோ தீவிரமாகச் சண்டை போட்டு அப்புறம் ஜெயிப்பது போல் தோன்றச் செய்துவிடவும் முடியும். இந்தியாவின் பொது மேடைகளில் இன்று நிழல் யுத்தங்களே அதிகமாக நடக்கின்றன.

இந்நாட்டின் அரசியல்மேடைப் பிரசங்கங்களில் பலவும், தேர்தல் வாக்குறுதிகளில் சிலவும் நிழல் யுத்தங்களுக்குப்

பிரத்யட்சமான உதாரணங்களாகும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/138&oldid=562380" இலிருந்து மீள்விக்கப்பட்டது