பக்கம்:சிந்தனை வளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நமது கலாசார வறுமைகள்

"வறுமையை விரட்ட வேண்டும், வறுமை ஒழிந்தா லொழிய நாடு உருப்படாது’-என்றெல்லாம் சில ஆண்டு களாக நம் காதில் விழுகிறது. அரசியல் தலைவர்கள் இவற் றைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிருர்கள், எழுது கிரு.ர்கள். w

வறுமையைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதுமே வசதி யுள்ளவளுவதற்கு ஒரே வழியோ என்று பலர் குதர்க்க மாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கு, வறுமையை அரசியல் வாதிகள் இன்னும் ஒரு மேடைப் பிரசங்கப் பொருளாகவே வைத்திருக்கிருர்கள். தொடர்ந்து வைத்துக் கொண்டு மிருக்கிருர்கள். -

என்ருவது ஒரு நாள் ஏதாவது ஒர் அதிசயம் நடந்து, இந்நாட்டில் வறுமையே இல்லாமல் போய்விட்டால் பேசு வித்ற்கும் எழுதுவதற்கும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட அதிர்ச்சியில் பல அரசியல்வாதிகள் அப்போதே துரக்கு மாட்டிக் கொண்டு செத்துப் போய் விடுவார்களோ என்று கூட நான் நினைப்பதுண்டு. - -

இந்நாட்டில் வறுமையைப் பற்றி அளவுக்கதிகமாகப்

பேசும் வசதியுள்ளவர்களும், அறியாமையைப் பற்றி அளவுக் கதிகமாகப் பேசும் அறிவுள்ளவர்களும், சத்தியத்தைப் பற்றி நிறைய அக்கறை காட்டுவதாகப் பாவிக்கும் அசத்திய வான்களும், பிறருடைய நியாயங்களுக்கு ஏஜென்ஸி எடுத்துக் கொண்டு வக்காலத்து வாங்கும் அநியாயப் பேர் வழிகளும், சொந்த முறையில் நீதியையும், நீதிமன்றங் களையும், கேவலப்படுத்திவிட்டு மக்களுக்கு நீதியும், சமத் துவமும் வழங்க நான் ஆட்சிக்கு வந்தால்தான் முடியும்’ என்று பாசாங்கு செய்பவர்களும், எவ்வளவிற்கு நாகரிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/14&oldid=562256" இலிருந்து மீள்விக்கப்பட்டது