பக்கம்:சிந்தனை வளம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சிந்தனை வளம்

அறிவுள்ளவர்கள் என்று வேறு விதமாக அவர்களைப் பிரிக்க லாம். ஆனால், துரதிருஷ்டவசமாகத் தமிழின் பெயரால் இங்கே தமிழ் அல்லாத வேறு காரணங்களுக்காக ஒரு நிழல் யுத்தம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

எல்லா அரசியல் கட்சி மேடைகளிலும் சமூக விரோத, சக்திகளைப் பூண்டோடு அழித்து விடப் போராடி வருகிருேம்” என்று ஒரு வாக்கியம் அடிக்கடி சொல்லப்படுகிறது. இந்த வாக்கியத்தின் மூலம் யாரைச் சாடுகிருேம் என்ற பிரக்ஞையே இன்றி, எந்த மேடையிலும், எந்தப் பேச்சாள ருக்கும் ரெடிமேடாகத் தாக்குவதற்கு உடனே வாய்ப்பளிப் பவர்கள் இந்த சமூக விரோத சக்திகள். இவர்களுக்கு, விலாசம் எதுவும் கிடையாது. மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இவர்களுக்குக் கிடையாது. ஏன் எங்களை த். தாக்கினர்கள்’ என்று எதிர்த்துக் கேட்கவும் இவர்களுக்குத் தெரியாது. இந்தச் சமூக விரோத சக்திகள் யாரென்று: யாருக்கும் இதுவரை துல்லியமாகத் தெரியமில்லை. தெரிந்து கொள்ள ஆவலும் இல்லை.

இன்னும் சில சமயங்களில் சமூக விரோத சக்திகளே’ ஒன்று சேர்ந்து கொண்டு உரத்த குரலில், சமூக விரோதி களை ஒழித்தே தீருவோம்’ என்று முழக்கமிடும் விநோதத் தையும் கேட்கலாம். குறிப்பிட்டுத் தாக்குவதற்கும், விமர்சிப்பதற்கும், போரிடுவதற்கும் எதுவும் இல்லாத. போது எல்லா தரப்பினருக்கும் வஞ்சகமில்லாமல், தாக்கு வதற்கென்றே கிடைப்பவர்கள் இந்த சமூக விரோத சக்தி: கள் !’

ஒரு சமயம் காரசாரமாக மேடையில் பேசும் ஒரு. அரசியல் கட்சித் தலைவரிடம் கேட்டேன்:

'நீங்களும் சமூக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்கிறீர்கள்! உங்களை எதிர்க்கும் இன்ன தலைவரும் அடிக்கடி சமூக விரோத சக்திகளே எதிர்த்துப் போராடுவதாகத்தான் சொல்லுகிருர். நாட்டில் ஒட்டு ம்ொத்தமாகப் பார்த்தால், உங்களையும் உங்களைப் போன்ற மற்றக் கட்சிகளையும் தவிர வேறு யாருமில்லை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/140&oldid=562382" இலிருந்து மீள்விக்கப்பட்டது