பக்கம்:சிந்தனை வளம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 14 I

பல பிரச்னைகளைப் பொறுத்து நமது போராட்டங் களும், எதிர்ப்புக்களும் இன்று அப்படித்தான் இருக்

கின்றன.

தமிழின் எதிரிகளை ஒழிப்பது, வறுமை ஒழிப்பு, ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது, ஜாதி வேறுபாடுகளை ஒழிப்பது, சமூக விரோதிகளை ஒழிப்பது போன்ற பலவற்றில் நம்முடைய பொது மேடைகளில் இன்னமும் நிழல் யுத்தங்கள்தான் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

தீவிர எதிரிகள் உடனே அழிந்து போர் முடிந்து விட்டால், நமது கட்சி, நமது இலக்கியம், நமது எடுபிடிகள் எல்லாவற்றுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமே” என்ற தயக்கத்தினலோ என்னவோ, எதிரிகளைப் பத்திரமாக விட்டு விட்டு அவர்களின் நிழல்களோடு முடிவின்றித் தொடர்ந்து போரிடும் சாகசக் கலைவன்மையை நம்மவர்கள் கற்றிருக்

கிருர்கள் போலிருக்கிறது.

சற்றே தொலைவிலிருந்து காணும் அப்பாவி மக்களின் பார்வையில் இந்த நிழல் யுத்தங்களைச் சாதுரியமாகச் செய் கிற கட்சி எதுவோ, அதுவே அதிகம் ஜெயிக்கிறது. அப்படிச் செய்ய முடியாதது தோற்கிறது. சுதந்திரப் போராட்டம் முடிந்து சுதந்திரமும் பெற்றபின், கடந்த முப்பதாண்டுகளில் அரசியல் கட்சிகளின் சாமர்த்தியம் இப்படி நிழல் சண்டை களை நீடிப்பதில்தான் இருக்கிறது இங்கே.

ஒருவேளை நிழல் யுத்தங்கள் இன்னும் சிறிது காலத்தில் இந்நாட்டு மக்களுக்குச் சலிப்பூட்டலாம். ஆனலும் கட்சி அரசியலுக்கும், மேடைகளுக்கும், பேச்சாளர்களுக்கும் அவையில்லாமல் வேறு ஒன்றுமே செய்ய முடியாது. நிழல் .யுத்தங்களையே சகல வீரதீர சாகலமும் உள்ளே அசல் யுத்தங் களேப் போல முப்பது வருஷங்களாக விடாமல் நடத்திக் :கொண்டிருக்க எவ்வளவு சாதுரியம் வேண்டும்?

இந்நாட்டின் எல்லாக் கட்சிகளுக்கும் மூல விருட்சமான காங்கிரஸ், (1948-க்குப் பின்) தொடங்கி, சிவஞான கிராமணியாரின் உள்ளங்கையகலத் தமிழரசு இயக்கம் வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/143&oldid=562385" இலிருந்து மீள்விக்கப்பட்டது