பக்கம்:சிந்தனை வளம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சிந்தனை வளம்

சுதந்திரத்துக்குப் பின் பல அரசியல் குழப்பங்கள், பல அரசியல் கட்சிகள், கூட்டணிகள் மாறி மாறி ஆண்ட சில மாநிலங்களில் மக்களிடம் போலீஸுக்கு இருந்த மரியாதை யும், போலிஸிடம் மக்களுக்கு இருந்த மரியாதையும் படிப் படியாகச் சிதறிப் போய் விட்டன. ஜனங்களையெல்லாம் குற்றவாளிகளாகவே பாவித்துக்கொண்டுபார்க்கும் போலீஸ் காரர்களும், போலீஸ்காரர்களை எல்லாம் கொடிய விரோதி களாகவே பாவித்துக்கொண்டு நடக்கும் ஜனங்களும் இருந்

தால் நிலைமை எப்படிச் சீர்ப்படும்? -

ஆக மொத்தத்தில் நல்லது கெட்டது, நியாய அநியாயம் தரம் பிரித்துச் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய போலீஸ், எதிலும் பட்டுக் கொள்ளாமல் பார்வையாளராக நின்று விடுவதே இன்று உத்தமம் என்று நினைக்கும்படி ஆகிவிட்டது. போலீஸ்காரர் களில் சிலரே அடி, உதை, இரத்தக் காயம் பட்டு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டால் கூடப் பெரும்பாலான பொது மக்களின் இரக்கமும், அரசியல் கட்சிகளின் கருணையும் அவர் களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் மேல் இரக்கப்படுவது எதிர்க்கட்சி அரசியலுக்கு லாபம் தராதே!

சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகத் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கையில் இறங்கினலும், "போலீ “ஸாரின் அட்டுழியம் மிருகத்தனமான தாக்குதல், அத்து மீறிய செயல்' என்றெல்லாம் அரசியல் கட்சிப் பேச்சாளர் களும், அரசியல் கட்சிப் பத்திரிகைகளும் சாடத் தொடங்கு -கின்றன.

போலீஸ், நடவடிக்கையில் இறங்காமல் சும்மா இருந்து விட்டாலோ, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய போலீஸ் புளியங்காய் பறிக்கவா போபிருந்தது?-என்றெல் லாம் கண்டனக் குர்ல்கள் எழும். - .

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்ருல் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. ஆளும் கட்சியும் சரி, எதிர்க் கட்சிகளும் சரி, எப்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முயன்றதற்காகத் தங்களைக் கண்டிப்பார்கள்? எப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/146&oldid=562388" இலிருந்து மீள்விக்கப்பட்டது