பக்கம்:சிந்தனை வளம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 置竺5、

கட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதற்காகக் கண்டிப் பார்கள் என்பது புரியாமல் போலீஸ்காரர்களே பல சமயங் களில் திணறிப் போகிருர்கள். х சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இந்திரா கைதானதை எதிர்த்து, மாநில அ(ர்ஸ்)ரசின் ஆசியுடன் காங்கிரஸ் குண்டர்கள் மத்திய அரசு உடைமைகளைச் சூறையாடிய போது, மாநிலப் போலிஸார் கை கட்டிச் சும்மா இருந்ததை அந்த அ ர சு அந்தரங்கமாகப் பாராட்டியதுபோல் பாராட்டப்படுகிற சந்தர்ப்பங்களும் இருக்கலாம். இந்த வகையில் போலீஸ் ஆளும் கட்சியின் உட்பிரிவு போலாகி விடுகிறது.

போலீஸால் முன்பு பாளையங்கோட்டையில் பேராசிரியர் தாக்கப்பட்ட போதும், கிளைவ் ஹாஸ்டலில் மாணவர்கள் போலீஸ் தரப்புக் குற்றங்களுக்குப் பதில் கூருமல் வாய் மூடி மெளனம் சாதித்தவர்களும் இப்போது புத்தாண்டு வாழ்த் துக் கூறும் எதிர்க் கட்சியாளர் என்ற முறையில், தமிழ்நாடு முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக அறிக்கை விடுகிற வசதியைக் கட்சி அரசியல் தருகிறது. பொது மக்கள் நலனுக்காகவும், சட்டம், ஒழுங்கைப் பாது காப்பதற்காகவும் இருக்கிற போலீலை ஆளும் கட்சியின் கைக்கூலிப் படை போல எதிர்க் கட்சிகள் சித்திரிக்க முயல். வதும், சில சமயங்களில் சில இடங்களில் போலீஸ்காரர்களே அந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல நடந்து கொண்டு விடுவதும் உண்டு. மிகப் பெரிய மனிதர்களும், பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் போலீலை மதித் தால்தான் மிகச் சிறிய மனிதர்களும், பொது மக்களும் மற்ற வர்களும் போலீஸை மதிப்பார்கள். -

குஜராத் தனியே பிரிக்கப்படாத பழைய பம்பாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது, மொரார்ஜி, தேசாயை ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற் காக அழைத்திருக்கிருர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குக் கால் மணி முன்னதாகவே தேசாய் அங்கே போய்விட்டார். அங்கே முகப்பில் சர்க்கஸ் உரிமையாளர் முதலியோர் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/147&oldid=562389" இலிருந்து மீள்விக்கப்பட்டது