பக்கம்:சிந்தனை வளம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 13

வறுமை, அல்லது கலாசார வறுமை உள்ளவர்கள் என்டர் தைச் சிந்திக்க வேண்டும்; எடுத்துச் சொல்லவும் வேண்டும். நாகரிகத்திலும், கலாசாரத்திலும் நாம் வேகமாக அடைந்து வரும் வறுமைகள்தான் அதிகம். கல்ச்சர், கல்ச் சர்டு, சிவிலைசேஷன், சிவிலைஸ்டு என்றெல்லாம் அகராதி களில் பார்க்கும் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண் டால், நான் கூறும் புதிய வறுமைகள் என்னென்னவாக இருக்க முடியும் என்பதை ஒரளவு புரிந்து கொள்ளலாம். உண்மையில் நாம் பண்பட்டவர்கள்தான என்று பிறர் சந்தேகப்படும் படியும், நாம் நாகரிகமடைந்தவர்கள்தான என்று பிறர் சந்தேகப்படும்படியும் எத்தனை சமயங்களில், எத்தனை விதங்களில் நடந்து கொள்கிருேம்என்பதைக்கண்டு பிடித்துவிட்டால் நம் நாகரிக வறுமைகளையும், கலாசார வறுமைகளையும் ஓரளவு புரிந்து கொண்டு விடலாம் என்று தோன்றுகிறது.

கலை, கல்வி, கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவை பற்றி எல்லாம் நிறையப் பேசுகிருேம், எழுதுகிருேம். எண்ணுகிருேம். ஆனால், செயலளவில் இவை தொடர்பாக நம்மிடமுள்ள ஏழைமைகள் அல்லது பற்ருக்குறைகள்தான் அதிகம். இந்த இடைவெளியையே கிரிடிபிவிடி கேப்’ (credibility gap) என்கிருர்கள். எஜுகேஷன்' 'கல்ச்சுரல் அஃபயர்ஸ்’ என்ற பிரிவுகளின்கீழ் நமது மத்திய பட்ஜெட் டின் உள்ளே ஒதுக்கப்படும் பெரிய தொகைகளையும் நினைத்து நாட்டிலுள்ள கலாசார வறுமையையும் நினைத்தால், இரண் டையும் நம்மால் நம்பவே முடியாது.

இந்தியக் கலாசாரம், தமிழ்க் கலாசாரம் என்றெல் லாம் தனித் தனிப் பெயர்களைச் செளகரியத்துக்காக வைத் துக் கொண்டிருக்கிருேமே ஒழிய கலாசாரம்’ (கல்ச்சர் என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தப்படி) என்னவோ ஒன்றுதான். பண்பட்டவர்கள், பண்படாதவர்கள் என்று இரண்டு பிரிவுகள்தான் இதில் இருக்க முடியும். மூன்ருவது வகைக்கு இதில் இடமே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/15&oldid=562257" இலிருந்து மீள்விக்கப்பட்டது